பாரத பிரதமர் மோடி மற்றும் பாரத நாட்டிற்கு அவபெயரை ஏற்படுத்தும் ஆம்னெஸ்டி இண்டர்நேஷனல் அமைப்பை மத்திய அரசு தடை செய்ய வேண்டும்” என அசாம் முதல்வர் ஹிமாண்டா பிஸ்வாஸ் சர்மா வேண்டுகோள்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது: இந்திய ஜனநாயக கட்டமைப்பு மற்றும் தலைமைக்கு எதிராக ஆம்னெஸ்டி அமைப்பு நீண்ட நாட்களாக சதி செயலில் ஈடுபட்டு வருகிறது. இதற்கு நான் கடும் கண்டனம் தெரிவிக்கிறேன். நமது நாட்டிற்கு அவப்பெயர் ஏற்படுத்தவும், இடையூறு செய்யவும் முயலும் அந்த அமைப்பை தடை செய்ய வேண்டும்.
இந்தியாவிற்கும் பிரதமர் மோடிக்கு எதிராகவும் அவதூறு ஏற்படுத்த இடது சாரி பயங்கரவாதத்தை ஆம்னெஸ்டி அமைப்பு ஆதரித்து வருவது நமக்கு தெரியும். இது சர்வதேச சதிச்செயல். இந்தியா சமூகங்களுக்கு இடையே பிரிவு ஏற்படுத்துவதே இந்த அமைப்பின் முக்கிய நோக்கம் ஆகும். இவ்வாறு ஹிமாண்டா பிஸ்வாஸ் சர்மா கூறினார்.