இந்து முன்னணி நடத்திய ஆலய நுழைவுப் போராட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்று கைது.

0
337

தென்காசி அருகே சங்கரன்கோவிலில் உள்ள சங்கரநாராயணசுவாமி கோவிலில் ஆடித்தபசு விழாவிற்கு தடை விதித்ததை கண்டித்து இன்று (23.07.2021) இந்து முன்னணி போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை காவல்துறை கைது செய்தது.


 

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயணசுவாமி கோமதி அம்பாள் திருக்கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் ஆடித்தபசு திருவிழா நடப்பது வழக்கம். உலகிற்கு சங்கரர் சங்கர நாராயணராக காட்சி அளித்து ஹரியும் சிவனும் என்ற தத்துவத்தை உலகிற்கு உணர்த்தும் விதமாக ஒரு ரூபத்தில் அம்பாளுக்கு காட்சி அளித்த திருக்கோலம் ஆடித்தபசாக கொண்டாடப்படுகிறது. தொடர்ந்து 12 நாட்கள் நடக்கும் ஆடித்தபசு திருவிழாவில் பங்கேற்பதற்காக தமிழகம் மட்டுமல்லாமல் பிற மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் வருவது வழக்கம். ஆடித்தபசு திருவிழாவின் முக்கிய நிகழ்வான இன்று மட்டும் நோய் தொற்று பரவலை காரணம் காட்டி பக்தர்கள் கோவிலுக்குள் செல்ல அனுமதி இல்லை என மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டது.

இதனை தொடர்ந்து, இந்து முன்னணி சார்பில் ஆலயம் நுழையும் போராட்டம் அறிவிக்கப்பட்டது. இன்று காலை 10 மணி அளவில் மாவட்ட துணைத் தலைவர் ஜெயக்குமார், குற்றாலநாதர் அவர்களின் தலைமையில் ஏராளமான இந்து முன்னணியினர் கோவிலுக்குள் செல்ல முற்பட்டபோது அனைவரும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். ஹிந்து வழிபாட்டு தலங்களில் பக்தர்கள் அனுமதி மறுக்கப்படுவதன் காரணமாக இந்து அறநிலையத்துறை மீது அதிருப்தியில் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here