டெல்லியில் நேற்று நடைபெற்ற சுதந்திர தின விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பேசிய போது எரிசக்தியில் பாரதம் தன்னிறைவு அடைய வேண்டும் அதுவே நமது இலக்கு என தெரிவித்தார்.
எரிசக்தி உற்பத்தியில் இந்தியா இன்னமும் தன்னிறைவை எட்டவில்லை. ஆண்டுதோறும் எரிசக்தி தேவைக்காக ரூ.12 லட்சம் கோடி செலவிடப்படுகிறது. சுயசார்பு கொள்கையான ‘ஆத்மநிர்பாரத்’ உருவாக்கத்தில் எரிசக்தியில் தன்னிறைவு பெறுவதும் மிகவும் முக்கியமானது.
எனவே, நாடு சுதந்திரமடைந்து 100 ஆண்டுகளை எட்டுவதற்குள் எரிசக்தி உற்பத்தியில் தன்னிறைவை எட்ட வேண்டும் என்பதே நமது இலக்காகும். இதற்காக தேசிய ஹைட்ரஜன் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நாட்டின் ஹைட்ரஜன் தேவை நிறைவு செய்யப்படுவதோடு, பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் நாடாக இந்தியா வளரும்.