நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முப்படை தளபதி பிபின் ராவத் நாட்டின் பாதுகாப்பு விஷயத்தில் எந்தவொரு சவாலையும் ஏற்க தயார் என கூறினார்.
நமக்கு பிரதமர் மோடி சிலவழிகாட்டுதல்களை வழங்கிஉள்ளார். நாட்டின் பொருளாதாரம் மீது நாம் கவனம் செலுத்துவதுடன் மனிதவள மேம்பாடுகுறித்து சிந்திக்க வேண்டும், தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சியை ஊக்குவிக்க வேண்டும்.பாதுகாப்புத் துறையில் சீர்திருத்தங்களை நோக்கி முன்னேற வேண்டும்.
ஆயுதப் படைகளை நவீனப்படுத்த பிரதமர் மோடிஉத்தரவிட்டுள்ளார். அவற்றின் போர்த்திறனை மேலும் அதிகரிப்பது மிகவும் அவசியம்.
காஷ்மீரில் எல்லை தாண்டிய தீவிரவாதத்தை முடிவுக்கு கொண்டு வருதில், ஆயுதப் படைகள் அதிக கவனம் செலுத்தி வருகின்றன. நாட்டின் பாதுகாப்பில் எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ள ஆயுதப் படைகள் தயார்நிலையில் உள்ளன.