நாடளுமன்றத்தை நடத்த அமளியில் ஈடுபட்ட எம்.பி.க்களுக்கு கடும் அபராதம் விதிக்கும் வகையில் மூத்த எம்.பி.க்கள் அடங்கிய சிறப்பு குழுவை அமைக்க மத்திய அரசு திட்டம்.
சமீபத்தில் நடந்த பார்லி. மழைக்கால கூட்டத் தொடர் முழுதும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. மேஜையின் மீது ஏறி, காகிதங்களை கிழித்தெறிந்து எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், பா.ஜ. சார்பில் வெங்கையா நாயுடுவுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதில், ‘அமளியில் ஈடுபடும் எம்.பி.க்களுக்கு கடும் அபராதம் விதிக்க வேண்டும். அதிகபட்சமாக பதவியில் இருந்து நீக்கி தண்டனை அளிக்க வேண்டும்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.அமளியில் ஈடுபட்டதாக, காங். திரிணமுல் காங்., சிவசேனா, கம்யூனிஸ்ட் கட்சிகள், ஆம் ஆத்மியைச் சேர்ந்த 15 எம்.பி.,க்களின் பெயர் பட்டியலும் அளிக்கப்பட்டுள்ளது.பா.ஜ.வின் கூட்டணி கட்சிகளான ஐக்கிய ஜனதா தளம், அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளும் இதுபோன்ற புகார் கடிதத்தை அனுப்ப உள்ளன.