
இஸ்லாமிய பயங்கரவாதத்தை தூக்கி பிடித்து தலிபான்களுக்கு ஆதரவு தெரிவித்து வீடியோ வெளியிட்ட மௌலானா சம்சுதீன் காஸிமி மீது இந்து முன்னணி புகார் கொடுத்தது.
இஸ்லாமிய பயங்கரவாதிகளான தலிபான்கள் ஆப்கானிஸ்தானில் வன்முறையில் ஆட்சியை பிடித்ததற்கு ஆதரவு தெரிவித்து பாரத பிரதமரையும், இந்திய வெளியுறவு கொள்கை பற்றியும் விமர்சனம் செய்து வீடியோ வெளியிட்ட மௌலானா சம்சுதீன் காஸிமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டி இந்து முன்னணி காவல்துறை தலைவர் (DGP) மற்றும் NIA அதிகாரிகளுக்கு புகார் கொடுத்தது.