ஆப்கானிஸ்தான் பெண்களை பாதுகாக்க ஒவைசியை அங்கு அனுப்பி விடலாம் – மத்திய அமைச்சர் ஷோபா கரண்ட்லாஜே

0
196

தலிபான்களுக்கு ஆதரவாக பேசிய இஸ்லாமிய கட்சியான ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசியை ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பி விடலாம் என மத்திய அமைச்சர் ஷோபா கரண்ட்லாஜே கூறியுள்ளார்.


ஆப்கானிஸ்தானில் இஸ்லாமிய பயங்கரவாதிகளான தலிபான்கள் ஆட்சியைப் பிடித்துள்ளனர். இந்நிலையில், உருது பேசும் இஸ்லாமியர்களுக்காக ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி இந்தியாவில் 5-வயதுக்குட்பட்ட 9 பெண் குழந்தைகளில் ஒன்று இறந்து விடுவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. பெண்களுக்கு எதிராக பல்வேறு வன்முறைகள் தினம் தினம் நடைபெறுகின்றன. ஆனால் மத்திய அரசுக்கு இதை பற்றி கவலையில்லை. ஆனால் ஆப்கானிஸ்தானில் பெண்கள் கொல்லப்படுவதாக இங்கே சிலர் முதலை கண்ணீர் வடிக்கிறார்கள், மத்திய அரசு அதனைப்பற்றி கவலைப்படுகிறது.

இதற்கு பதிலடியாக மத்திய அமைச்சர் ஷோபா கரண்ட்லாஜே கூறுகையில் ‘‘பெண்களின் பாதுகாப்பு பற்றி ஒவைசி அதிகமாகவே பேசுகிறார். ஆப்கானிஸ்தானில் உள்ள பெண்களையும் அங்குள்ள மக்களையும் காக்க ஒவைசியை அங்கு அனுப்பி விடலாம்’’ எனக் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here