தாயகம் திரும்ப காத்திருந்த இந்தியர்களை கடத்திய தாலிபன்கள்.

0
567

ஆப்கன் தலைநகர் காபூல் விமான நிலையம் அருகே சொந்த நாட்டிற்கு திரும்ப காத்திருந்த 150 பேரை இஸ்லாமிய தலிபான் பயங்கரவாதிகள் கடத்தி சென்றதாகவும், அவர்களில் பெரும்பாலானவர்கள் இந்தியர்கள் எனவும் அந்நாட்டு மீடியாக்கள் செய்தி வெளியிட்டு உள்ளன. ஆனால், இது குறித்து உறுதியான தகவல் வெளியிடப்படவில்லை.


ஆப்கானில் இஸ்லாமிய பயங்கரவாதிகளான தலிபான்களுக்கு பயந்து, அங்கிருந்து ஏராளமான வெளிநாட்டினர், தாயகம் திரும்பி வருகின்றனர். அவர்களை சம்பந்தப்பட்ட நாடுகள் விமானங்களை அனுப்பி அழைத்து வருகின்றனர். இந்நிலையில், காபூல் விமான நிலையம் அருகே காத்திருந்த 150 பேரை தலிபான் பயங்கரவாதிகள் கடத்திச் சென்றதாகவும், அவர்களில் பெரும்பாலானோர் இந்தியர்கள் எனவும், அந்நாட்டைச் சேர்ந்த பெரும்பாலான மீடியாக்கள் செய்தி வெளியிட்டு உள்ளன. ஆனால், இது குறித்து உறுதியான தகவல் இல்லை. இந்தியர்கள் கடத்தலை உறுதி செய்ய வெளியுறவுத்துறை அமைச்சகம் தீவிர முயற்சி செய்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here