அகதியாக சென்றாவது உயிர் வாழ்ந்து விடலாம் என்று எண்ணி தப்பிக்க முயன்றவர்களுக்கு கிடுக்கு பிடி.

0
471

ஆப்கானிஸ்தானியர்கள், வெளிநாட்டில் அடைக்கலம் புகுவதை தடுக்க காபூல் விமான நிலையம் செல்லும் சாலையை தலிபான்கள் அடைத்துள்ளனர். வெளிநாட்டினர் செல்வதற்கு மட்டும் அனுமதி வழங்கப்படும் என தெரிவித்து உள்ளனர்.


ஆப்கனை தலிபான்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்ததை தொடர்ந்து, அவர்களுக்கு பயந்து அந்நாட்டு மக்கள் வெளிநாடுகளுக்கு வெளியேற முயற்சி செய்து வருகின்றனர். இதனால், ஆயிரகணக்கானோர் காபூல் விமான நிலையத்தில் குவிந்து வருகின்றனர். எப்படியாவது நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என முயற்சியில் ஈடுபட்டனர். விமானத்தின் சக்கரத்தில் தொங்கியபடி பயணித்த சிலர் கீழே விழுந்து உயிரிழந்தனர். மேலும் விமான நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெிரசலில் சிக்கி 7 பேர் உயிரிழந்தனர்.

இந்நிலையில் தலிபான் செய்தித்தொடர்பாளர் ஜபியுல்லா முஜாகித் கூறியதாவது: காபூல் விமான நிலையம் செல்லும் சாலை அடைக்கப்பட்டு உள்ளது. இந்த சாலையை ஆப்கானியர்கள் பயன்படுத்த முடியாது. ஆனால், வெளிநாட்டினர் இந்த சாலையில் விமான நிலையத்திற்கு செல்லலாம். காபூல் விமான நிலையத்தில் உள்ளவர்கள் வீடுகளுக்கு திரும்ப வேண்டும். அவர்களுக்கு எந்த தண்டனையும் வழங்கப்படாது. என தெரிவித்தார்.

இஸ்லாமிய பயங்கரவாதிகளான தலிபான்கள் இந்த ஆப்கன் மக்கள் வெளிநாட்டிற்கு சென்றாவது அகதிகளாகவாவது உயிர் வாழ்ந்து விடலாம் என்று எண்ணி தப்பித்தால் அதற்கும்கிடுக்கு பிடி போட்டு விட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here