ஒரு நடிகையின் காலில் சுடப்பட்ட பின் கூறப்பட்டது….-“இது இந்தியா இல்லை “
அவள் ஒரு நடிகை. தனது சொந்த நாட்டில் நடித்து அந்த மக்களின் பணத்தாலேயே வாழ்ந்து கொண்டு பிரபலமான நடிகை அவள். கஷ்டமான ஒரு சூழ்நிலையில் சொந்த நாடு இருக்கும் போது நாட்டின் எதிரிகளுக்கு ஆதரவாக தன் சொந்த தேசத்திடமே தேசத்திற்கு விரோதமான சில கேள்விகளைக் கேட்டாள் அவள்.
இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினர் அவள் காலைக் குறி பார்த்துச் சுட்டனர்; சுட்டு விட்டுச் சொன்னார்கள் – “இது ஒன்றும் இந்தியா இல்லை!”
இந்தியாவில் தேச துரோகம் செய்து கொண்டே பிரபலமாகவும் இருக்கலாம். தேசத்திற்கே துரோகம் விளைவிக்கும் கேள்விகளும் கேட்கலாம்! எப்படி இருந்தாலும் கவலை இல்லை.
ஆனால் இஸ்ரேல் அப்படி இல்லை. தகுந்த தண்டனையை அந்த நடிகைக்குக் கொடுத்தது – வாழ்நாள் எல்லாம் ஞாபகம் இருக்கும் தண்டனை!
இஸ்ரேலே, உனக்கு ஒரு சல்யூட்! ஜனநாயகத்தின் நான்காவது தூண் ஊடகங்கள் – மீடியாக்கள்! ஆனால் அந்த அருமையான தூணை கேலிக் கூத்தாக்கும் சேனல்கள் உலகெங்கும் (இந்தியாவில் எண்ண முடியாத அளவில்!) உள்ளன.
அல் ஜஜீரா ( Al Jazeera) என்று ஒரு சேனல்! இந்த அல் ஜஜீரா இஸ்ரேலைப் பற்றித் தொடர்ந்து அவதூறான செய்திகளையும் பொய்ச் செய்திகளையும் பரப்பிக் கொண்டே இருந்தது. இஸ்ரேல் ஒரே ஒரு மணி நேரத்தில் அந்த சேனலின் தலைமையகத்தைப் பொடி பொடியாக்கியது. அது மட்டுமல்ல, இஸ்ரேல், இந்தியா அல்ல என்ற ஒரு செய்தியையும் தந்தது. இந்தியாவில் எவன் வேண்டுமானாலும் எதில் வேண்டுமானாலும் தேசத் துரோகக் கருத்தைச் சொல்லலாம். பிரிவினை வாதத்தைத் தூண்டலாம், சொல்லலாம்.
மத்திய அரசை ஒன்றிய அரசு என்று சொல்லலாம்; ஜெய்ஹிந்த் என்பதை கவர்னர் உரையிலிருந்து நீக்கலாம்; அதை சபாஷ் போட்டு ஒரு எம்.எல்.ஏ.சபையில் பேசலாம். என்ன வேண்டுமானாலும் இந்தியாவில் நடக்கும்.
இந்திய அரசு இஸ்ரேலின் வழியில் நடக்க வேண்டும். நடந்தால் பல நடிகர், நடிகையர், டைரக்டர்கள் நொண்டிக் கொண்டு தான் நடக்க வேண்டி வரும் – வாழ் நாள் முழுவதும்!!
யாஸர் அராஃபத், தீவிரவாதி இஸ்ரேலுக்கு எதிராக பாலஸ்தீனத்தை தனி நாடாக அறிவித்தவுடன் அதற்கு ஆதரவு தெரிவித்தது யார் தெரியுமா?
சவூதி அரேபியாவா – இல்லை!
பாகிஸ்தானா – இல்லை!
ஆஃப்கானிஸ்தானா – இல்லை!
இராக்கா – இல்லை!
துருக்கியா – இல்லை!
நன்கு யோசித்துப் பாருங்கள்? யார் உடனே அதை அங்கீகரித்து ஆதரவு தெரிவித்தது. நாம் தான் இருக்கிறோமே, செகுலர் கண்ட்ரி என்று. இந்தியா தான் அங்கீகரித்தது!
இந்திரா காந்தி வழக்கம் போல முஸ்லீம்களை தாஜா செய்ய பாலஸ்தீனை அங்கீகரித்தார். ராஜீவ் காந்தியோ அராஃபத்துக்கு ப்ன்னாட்டு புரிதலுக்காக ஜவஹர்லால் நேரு (Jawaharlal Nehru Award for International Understanding) பரிசை அளித்தார்.
அது மட்டுமல்ல, அவர் உலகம் முழுவதும் சுற்ற ஒரு போயிங்கை வேறு பரிசாக அளித்தார். அதே அராபத் நன்றி கெட்டு, காஷ்மீரை பாகிஸ்தானின் பகுதியே தான் என்று ஓ ஐ சியில் – இஸ்லாமிய நாடுகளுக்கான நிறுவனத்தில் (Organisation of Islamic Countries) கூறினார். எப்படிப்பட்ட நன்றி உணர்வு பாருங்கள்!
அது மட்டுமல்ல, அவர் சொன்னார் :” எப்போது பாகிஸ்தான் வேண்டுகிறதோ அப்போது எனது வீரர்கள் காஷ்மீரின் சுதந்திரத்திற்காகப் போரிடுவார்கள்”.
இந்த அராஃபத் 103 நாடுகளில் தீவிரவாதி என்று அறிவிக்கப்பட்ட ஒரு ஆள்!!விமானங்களை கடத்தியவர். 2000 அப்பாவிகளைக் கொன்று குவித்தவர். அப்படிப்பட்ட ஆசாமிக்குத் தான் நமது இண்டர்நேஷனல் அவார்ட்!
எப்படிப்பட்ட நாடு இந்தியா பாருங்கள்!! ராஜீவ் காந்தி, ‘நேரு புரஸ்காரை’ (புரஸ்கார் – பரிசு) தந்தார். அதாவது அதற்கு உரித்தான ஒரு கோடி ரூபாயை அளித்தார். 200 கிராம் தங்கத்தினால் ஆன ஒரு ஷீல்டு வேறு அவருக்குக் கொடுக்கப்பட்டது!
1988இல் அளிக்கப்பட்ட அதன் இன்றைய மதிப்பை சும்மா ஒரு கணக்குப் போட்டுப் பாருங்கள் – எவ்வளவு? விழி பிதுங்குகிறதா!.
இதே அராஃபத் காஷ்மீருக்காக பாகிஸ்தானுக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்தார். இஸ்லாமிய நாடுகளுக்கு எதிராக இருப்பவரை இஸ்லாமிய நாடுகள் அனைத்தும் ஆதரிக்க வேண்டும். பாலஸ்தீனத்திலும் இந்தியாவிலும் முஸ்லீம் அல்லாதோரால் முஸ்லீம்கள் கொல்லப்படுகிறார்கள். ஆகவே இஸ்லாமிய நாடுகள் அனைத்தும் ஒன்று சேர வேண்டும் என்றார் அஃராபத்.
இப்படிப்பட்ட சமீப கால சரித்திரத்தைக் கொண்ட காங்கிரஸ்காரர்கள் இன்றைய அரசுக்கு நமது வெளிநாட்டுக் கொள்கை எப்படி இருக்க வேண்டும் என்று சொல்லித் தர விழைகிறார்கள்!