ஆப்கானிஸ்தானின் காபூலிலிருந்து 24 இந்தியர்கள், நேபாளத்தைச் சேர்ந்த 11 பேர் தில்லி வந்துகொண்டிருப்பதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் இஸ்லாமிய பயங்கரவாதிகளான தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியதால் அந்நாட்டில் உயிர்வாழ முடியாத பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கிறது. சர்வதேச நாடுகள் ஆப்கானிஸ்தானிலுள்ள சொந்த குடிமக்களை திரும்ப அழைத்து வருகின்றனர். இந்தியாவும் இதுவரை 800-க்கும் மேற்பட்டவர்களை அழைத்து வந்துள்ளது.
இந்த வரிசையில் தற்போது 24 இந்தியர்கள், நேபாள நாட்டைச் சேர்ந்த 11 பேர் என மொத்தம் 35 பேர் இந்திய விமானப் படை விமானம் மூலம் தில்லி வந்து கொண்டிருப்பதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.