இஸ்லாமிய பாயங்கரவாதிகளான தாலிபன்கள் ஆப்கனை கைபற்றியதில் இருந்து காபூலில் உணவு மற்றும் நீர் உள்ளிட்டவற்றின் விலை உயர்ந்துள்ளதால் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் நிலவி வரும் அசாதாரண சூழல் காரணமாக அனைத்து பொருள்களின் விலையும் உயர்ந்துள்ளது. தலைநகர் காபூலில் ஒரு லிட்டர் குடிநீர் பாட்டிலின் விலை இந்திய மதிப்பில் ரூ.3 ஆயிரத்திற்கும், உணவு ரூ.7400க்கும் விற்பனையாவதாக தெரிய வந்துள்ளது.
அத்தியாவசியமான உணவு மற்றும் குடிநீரின் விலை உயர்ந்துள்ளதால் மக்கள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். காபூலில் உணவு மற்றும் தண்ணீரை வாங்க மக்கள் வரிசைகட்டி நிற்பது காண்போரை கலக்கமடையச் செய்துள்ளது.