ஒரு சகாப்தம் முடிவுக்கு வர இருக்கிறது

0
274
ஒரு சகாப்தம் முடிவுக்கு வர இருக்கிறது
வரும் 10/15 ஆண்டுகளில் ஒரு தலைமுறை உலகை விட்டு போகஇருக்கிறது.
 
போகப்போகிற அந்த
 
தலைமுறை மக்கள் முற்றிலும் வேறுபட்டவர்கள்.
 
இவர்கள் இரவில் சீக்கிரம் தூங்குபவர்கள், அதிகாலையில் சீக்கிரமே எழுபவர்கள்,
காலையில் நடைப்பெயர்ச்சிக்கு செல்பவர்கள்
வீட்டு தோட்டம் செடிகளுக்கும் தண்ணீர் கொடுப்பவர்கள்,
கடவுளை வழிபடுவதற்காக தானே பூக்களைப் பறித்து, பிரார்த்தனை செய்பவர்கள்,
 
தினமும் கோவிலுக்குச் செல்பவர்கள்.
வழியில் சந்திப்பவர்களுடன் பேசுபவர்கள், அவர்களின் மகிழ்ச்சியையும் துயரத்தையும் விசாரிப்பவர்கள், இரு கைகளை கூப்பிவணங்குபவர்கள்,
 
வழிபாடு இல்லாமல் உணவை எடுத்துக்கொள்ளாதவர்கள்.🙏
 
அவர்கள் உலகம் வித்தியாசமான உலகம்.
 
திருவிழாக்கள்,விருந்தினர் உபாச்சாரம்,உணவு,
தானியங்கள்,காய்கறிகள்,அக்கறை,யாத்திரை,பழக்கவழக்கங்கள் அவர்களின் அனைத்துமே இந்து தர்மத்தைச் சுற்றி சுற்றியே வருகிறது.
 
லேண்ட் லைன் தொலைபேசி மீது அலாதி பிரியம் கொண்டவர்கள், தொலைபேசி எண்களை டைரியில் பராமரிப்பவர்கள், wrong நம்பர் கூடவும் அரைமணி நேரம் பேசுபவர்கள் ,
 
ஒரு நாளைக்கு இரண்டு-மூன்று முறை செய்தித்தாளைப் படிப்பவர்கள்
 
எப்போதும் ஏகாதசி , அமாவாசை மற்றும் பௌர்ணமி நினைவில் கொள்பவர்கள்இந்த மக்கள், கடவுள் மீது வலுவான நம்பிக்கை உள்ளவர்கள், சமூக பயம் உள்ளவர்கள்,
 
பழைய செருப்பு உடன் உலா வருபவர்கள், பனியன், சோடா புட்டி கண்ணாடி என சதா எளிய தோற்றத்தில் உலா வருபவர்கள்.
 
கோடையில், ஊறுகாய், வடாம் தயாரிப்பவர்கள், வீட்டில் உள்ள உரலில் இடித்த மசாலாப் பொருள்களைப்பயன்படுத்துபவர்கள்
 
எப்போதும் நாட்டு தக்காளி, கத்திரிக்காய், வெந்தயம், கீரைகளைத் தேடி தேடி வாங்குபவர்கள்.
 
இவர்கள் அனைவரும் நம்மை மெதுவாக விட்டு செல்ல இருக்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா?
 
உங்கள் வீட்டிலும் இப்படி யாராவது இருக்கிறார்களா? ஆம் எனில், அவர்களைமிகவும் அன்பாக கவனித்துக் கொள்ளுங்கள்.மரியாதை கொடுங்கள் அவர்களிடம் வாழ்வியலை கற்று கொள்ளுங்கள்இல்லையெனில் அவர்களுடன், ஒரு முக்கியமான வாழ்வியல் என்னும் அதிமுக்கிய வாழ்க்கைப்பாடம் போய்விடும் ..
 
. அதாவது,மனநிறைவு,எளிமையான வாழ்க்கை,உத்வேகம் தரும் வாழ்க்கை,கலப்படம்மற்றும் புனைவு இல்லாத வாழ்க்கை
,மதத்தின் வழியைப் பின்பற்றும் வாழ்க்கை மற்றும் அக்கறையுள்ள ஒரு ஆத்மார்த்தமான வாழ்க்கை எல்லாம் அவர்களுடன் மறைந்து விடும்.
 
உங்கள் குடும்பத்தில் யார் மூத்தவராக இருந்தாலும், அவர்களுக்கு மரியாதை , நேரம் மற்றும் அன்பு கொடுங்கள்.🙏🌹
 
நம்முன்னோர்களே நமது அடையாளம்நமதுமுகவரிமற்றும்நமது பெருமை 🙏
 
சனாதன வாழ்வியில் சடங்குகள் மட்டுமே குற்றங்களை தடுக்க முடியும், அரசாங்கத்தால் முழுமையாக தடுக்க இயலாது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here