ஈயம் கலந்த பெட்ரோல் தற்போது பயன்பாட்டில் இல்லை ; சுற்றுசூழல் பாதுகாப்பை உறுதி செய்த ஐநா சபை.

0
483

மிகவும் மாசு ஏற்படுத்தும் ஈயம் கலந்த பெட்ரோலை கார்கள், லாரிகளுக்கு பயன்படுத்தும் நாடுகள் தற்போது உலகில் எதுவும் இல்லை என ஐ.நா.,வின் சுற்றுசூழல் திட்டப் பிரிவு அறிவிப்பு.


வாகனங்களின் இயந்திர செயல்திறனை மேம்படுத்துவதற்காக 1920-களில் பெட்ரோலுடன் ஒரு வகை ஈயத்தை கலக்கத் தொடங்கினார். அதனால் வாகனங்களின் செயல்திறன் கூடியது. ஆனால்Petrol மனிதர்களின் உடல்நலம் குன்றியது. இதயநோய், பக்கவாதம், புற்றுநோய், குழந்தைகளின் மூளை வளர்ச்சி பாதிப்பு என ஏகப்பட்ட பிரச்னைகள் உருவாகின. நிலம், நீர், காற்று என அனைத்தும் ஈய பெட்ரோலால் மாசடைந்தன. இருப்பினும் 1970-கள் வரை, சுமார் அரை நூற்றாண்டு காலம் உலகளவில் அனைத்து நாடுகளிலும் பெட்ரோலில் ஈயம் கலக்கப்பட்டது.

அதன் பின்னரே அதன் விளைவுகள் தெரிய ஆரம்பித்து பணக்கார நாடுகள் அதனை 1980களில் கைவிட்டன. 2000-ம் ஆண்டில் சுமார் 86 நாடுகள் ஈயப் பெட்ரோலை பயன்படுத்தி வந்தன. இந்தியா அதே காலக்கட்டத்தில் அவ்வகை பெட்ரோலை தடை செய்தது. அதன் பின்னர் பெரும்பாலான நாடுகளும் அவ்வகை பெட்ரோலை தடை செய்துவிட்டன. கடந்த தசாப்தத்தில் ஈராக், ஏமன், அல்ஜீரியா உள்ளிட்ட சொற்ப நாடுகள் மட்டுமே இத்தகைய நச்சு பெட்ரோலை வழங்கின. இந்நிலையில் கடைசி நாடாக அல்ஜீரியாவும் கடந்த ஜூலையில் அவற்றை முடிவுக்கு கொண்டு வந்துவிட்டது.

இது குறித்து ஐ.நா., பொதுச் செயலர் அன்டனியோ குட்டரெஸ் கூறியதாவது: ஈயம் கலக்கப்பட்ட பெட்ரோல் பயன்பாட்டை முடிவுக்கு கொண்டு வந்திருப்பது ஒரு சர்வதேச வெற்றிக் கதை. இதன் மூலம் இதயநோய், புற்றுநோய் போன்றவற்றால் ஏற்படும் 10 லட்சம் முன் கூட்டிய இறப்புகளை தடுக்கும். மேலும் இது குழந்தைகளின் ஐ.க்யூ பாதிக்கப்படுவதையும் தடுக்கிறது. என கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here