சீனா கடந்த ஆண்டு நேபாளின் ஹும்லா மவட்டத்தில் நிலத்தை ஆக்கிரமித்து ஒன்பது கட்டிடங்களை கட்டியது. நேபாள காங்கிரசின் மாகாண சட்டமன்ற உறுப்பினர் ஜீவன் பகதூர் ஷாய் இந்த ஆக்கிரமிப்பு குறித்து ஆதாரங்களுடன் பேசியபோது, முன்னாள் பிரதமர் கே.பி சர்மா ஒலி’யின் அரசு அதனை நிராகரித்தது. இந்நிலையில், தற்போது நேபாள புதிய பிரதமர் ஷேர் பகதூர் தியூபாவின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், சீனாவுடனான ஹும்லா உள்ளிட்ட எல்லை தகராறுகளைப் ஆய்வு செய்ய உள்துறை அமைச்சக இணைச் செயலாளர் தலைமையில் ஐந்து பேர் கொண்ட குழுவை அமைத்தது. இக்குழுவினர் சர்ச்சைக்குரிய பகுதிக்குச் நேரில் சென்று ஆய்வு செய்து அரசிற்கு அறிக்கை அளிப்பார்கள் என்று சட்டம் மற்றும் நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சர் ஞானேந்திர பகதூர் கார்க்கி கூறினார்.