மூலிகை வளர்ப்புக்கு உத்வேகம்

0
423

ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய மருத்துவ தாவரங்கள் வாரியம் (NMPB) 75வது சுதந்திர தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக பாரதத்தில் மருத்துவ தாவரங்கள் வளர்ப்பதை ஊக்குவிக்கும் பொருட்டு, நமது நாட்டில் அடுத்த ஆண்டிற்குள் 75,000 ஹெக்டேர் நிலத்தில் மூலிகை பயிர்களை வளர்ப்பது குறித்த தேசிய பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளது. இதனையொட்டி விவசாயிகளுக்கு இலவசமாக பாரிஜாதம், வில்வம், நாவல், வேம்பு, அஸ்வகந்தா உள்ளிட்ட மூலிகை செடிகள் வழங்கப்பட்டன.

இதில் பேசிய மத்திய ஆயுஷ் துறை அமைச்சர் சர்பானந்தா சோனோவால், ‘75,000 ஹெக்டேரில் மூலிகைகள் வளர்ப்பது பாரதத்தில் மருந்துகள் கிடைப்பதை உறுதி செய்யும். விவசாயிகளுக்கு வருமான ஆதாரமாக இருக்கும். பசுமை பாரதக் கனவை நனவாக்கும். பாரம்பரிய மருத்துவத்தில் தன்னிறைவு பெற உதவும். கடந்த 1.5 ஆண்டுகளில், மூலிகைத் தாவர சந்தை பாரதத்தில் மட்டுமல்ல, உலகம் முழுவதிலும் அதிகரித்துள்ளது. அஸ்வகந்தா இப்போது அமெரிக்காவில் அதிகம் விற்பனையாகும் பொருட்களில் மூன்றாவது இடத்தில் உள்ளது’ என்றார்.

Source by – Vijayabharatham Weekly

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here