ரைடிங் சன்பீம்ஸ் என்ற சுற்றுச்சூழல் அமைப்பின் அறிக்கையில், ‘பாரதத்தில் இந்திய ரயில்வே, மிகப்பெரிய மின்சார நுகர்வு அமைப்பு மற்றும் மூன்றாவது பெரிய டீசல் நுகர்வு அமைப்பு. கடந்த 2018-19ல் இது, 17,682 டெராவாட் மின்சாரம், 2,749 பில்லியன் லிட்டர் டீசல், 1,000 டன் நிலக்கரியை பயன்படுத்தியது. பாரதத்தின் மொத்த பசுமை வாயு உமிழ்வில் ரயில்வேயின் பங்கு 4 சதவீதம். 2023க்குள் ரயில்வேயின் 100 சதவீத மின்மயமாக்கலுக்கான திட்டங்களை அரசு அங்கீகரித்தது. 2030க்குள் காரன் உமிழ்வை பூஜ்ஜியமாகக் குறைக்கவும் அதன் மூலம் ஆண்டுக்கு ரூ. 17,000 கோடியை மிச்சப்படுத்தவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்காக காற்றாலை, சூரிய மின்னாற்றல் உள்ளிட்ட மாற்று எரிசக்தி பயன்பாடுகளை செயல்படுத்தி வருகிறது. இந்த செயல்முறை, ஆண்டுக்கு குறைந்தபட்சம் 15 மில்லியன் டன் கார்பன் டை ஆக்சைடு உமிழ்வைக் குறைக்க உதவும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.