பெண்கள் விளையாட்டில் பங்கேற்பது அவசியமில்லை என்று கருதுகிறோம். குறிப்பாக கிரிக்கெட் விளையாடுவது தேவையற்றது என யங்கரவாத தலிபான்கள் அமைப்பின் கலாச்சார பிரிவின் துணைத் தலைவர் அஹமதுல்லா வாசிக் தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானை முழுமையாக தங்கள் கட்டுப்பாட்டுகள் கொண்டுவந்துள்ள இஸ்லாமிய பயங்கரவாதிகளான தலிபான்கள், இடைக்கால அரசை அறிவித்தனர். இதில் தற்காலிக பிரதமராக முல்லா முகமது ஹஸன் அகுந்த் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், பயங்கரவாத தலிபான்கள் அமைப்பின் கலாச்சார பிரிவின் துணைத் தலைவர் அஹமதுல்லா வாசிக், தனியார் சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: பெண்கள் விளையாட்டில் பங்கேற்பது அவசியமில்லை என்று கருதுகிறோம். குறிப்பாக கிரிக்கெட் விளையாடுவது தேவையற்றது.
கிரிக்கெட்டில் பெண்கள் பங்கேற்றால் அவர்களின் உடல், முகம் ஆகியவை மூடப்படாது. அனைவரும் பார்க்கும் வகையில் உடல் உறுப்புகள் தெரியக்கூடும். இதுபோன்று பெண்கள் ஆடை அணிவதை இஸ்லாம் அனுமதிப்பதில்லை. இன்றைக்கு இருக்கக்கூடிய ஊடக உலகத்தில் புகைப்படங்கள், வீடியோக்கள் அதிகமாக பகிரப்படுவதால், இதனை அனைவரும் பார்க்கக் கூடும். இஸ்லாம் மற்றும் இஸ்லாமிய அரசு, கிரிக்கெட் போன்ற விளையாட்டுகளை பெண்கள் விளையாடுவதை அனுமதிக்காது. இப்போதுள்ள சூழலில் பெண்கள் கிரிக்கெட் மட்டுமல்ல எந்த விளையாட்டும் விளையாடுவது பாதுகாப்பானது அல்ல. இவ்வாறு அவர் கூறினார்.