ஷுப்ரக் என்ற குதிரையின் மறக்கடிக்கப்பட்ட வரலாறு.

0
1295

குத்புதீன் ஐபெக் குதிரையில் இருந்து தவறி விழுந்து இறந்தார் என வரலாற்றுப் பாடத்தில் படித்திருக்கிறோம். இது எல்லோருக்கும் தெரியும். ஆனால் எப்படி இறந்தார்? என்ற உண்மை வரலாறு மறைக்கப்பட்டு விட்டது. எப்படி? என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

‘ஷுப்ரக்’ வரலாறு..!

குத்புதீன் ஐபெக் ராஜபுதனத்துடன் பரஸ்பரம் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டான். ஆனால் அதை மீறி சூழ்ச்சியால் உதய்பூரின் இளவரசர் ராஜ்கன்வர் கர்ணசிங்கை கைது செய்து லாகூருக்கு அழைத்துச் சென்றான்.

ராஜ்கன்வருக்கு ‘சுப்ரக்’ என்ற சுவாமி பக்தி உள்ள வீரமான குதிரை இருந்தது, குத்புதீன் அந்த குதிரையை மிகவும் விரும்பி அதை அவனுடன் கொண்டு போனான். ராஜ் கன்வருக்கு சிறைச்சாலையில் இருந்து தப்பி ஓட முயற்சித்தார் எனக்குற்றம் சாட்டப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது..

அவருக்கு தண்டனை கொடுப்பதற்காக ஜன்னத் பாக் எனப்படும் மேடைக்கு அழைத்துச் சென்றனர். இளவரசனின் தலை வெட்டப்பட்டு தலையை ‘போலோ’ விளையாட முடிவு செய்யப்பட்டது. (அந்த விளையாட்டின் பெயர் மற்றும் விளையாடும் விதம் வேறு).

குத்புதீன் தானே ராஜ்கன்வர் மரணத்தைப் பார்க்க குதிரை ‘ ஷுப்ரக்’ மீது சவாரி செய்து தனது அணியுடன் ஜன்னத் பாக்க்கு வந்தான். ‘ஷுப்ரக்’ குதிரை கைதியாக இளவரசர் ராஜ்கன்வரை பார்த்தவுடன், குதிரையின் கண்களில் இருந்து கண்ணீர் ஆறாக பெருகி வழிகிறது.

ராஜ்கன்வர் தலையை வெட்ட சங்கிலிகள் அகற்றப்பட்டு தலையை திறந்தவுடன். ‘ஷுப்ரக்’ குதிரை தன்மீது அமர்ந்திருந்த குத்புதீனை தரையில் தள்ளிக் கீழே வீழ்த்தியது. அத்துடன் குத்புதீனின் மார்பை தன் வலுவான கால்களால் தாக்கியது.

அதிபயங்கர தாக்குதலால் அங்கேயே குத்புதீன் உயிர் பிரிந்தது. இதை இஸ்லாமிய படை வீரர்கள் கண்டு வியப்படைந்தனர். வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்ட இளவரசர் ராஜ்கன்வர் சுற்றி இருந்த வீரர்களிடமிருந்து தப்பித்து ‘ஷுப்ரக்’ மீது சவாரி செய்தார். ‘ஷுப்ரக்’ காற்றுடன் பந்தயம் கட்டிப் பறப்பது போல் பறந்தது.

லாகூரிலிருந்து உதய்பூருக்கு நிற்காமல் ஓடி, உதய்பூரில் அரண்மனை முன் சென்று நின்றது. இளவரசன் குதிரையில் இருந்து இறங்கி தன் பிரியமான குதிரை ஷுப்ரக்கை தட்டிக்கொடுக்க கை நீட்டினான். ஆனால் ஷுப்ரக் சிலையாக நின்றிருந்ததைக் கண்டு அதிர்ச்சியானார். ஆம் ஷுப்ரக்கின் உயிர் பிரிந்திருந்தது.

அதன் தலையில் கை வைத்த உடனே ‘ஷுப்ரக்’ உடல் உருண்டது. ஆம்! தன் உயிரைக் கொடுத்து தன் அரசனை காப்பாற்றியது. இந்த உண்மை இந்திய வரலாற்றில் எங்கும் கற்பிக்கப்படவில்லை. மறைக்கப்பட்டது… மறக்கடிக்கப்பட்டது…

ஏனெனில் இடதுசாரிகள் மற்றும் காங்கிரஸ், கைக்கூலி எழுத்தாளர்கள் தங்கள் எஜமானரின் இழி துயரமான மரணத்தைச் சொல்லத் தயங்கினார்கள்.

ஆனால் பெர்சியனின் பல வரலாற்றுப் புத்தகங்களில் குத்புதீன் மரணம் இப்படித்தான் என விவரிக்கப்பட்டுள்ளது.

சுவாமி பக்தர் மாவீரன் ‘ஷுப்ரக்’ க்கு வீர வணக்கம்.சொல்லுவோம்!

ஜெய் ஹிந்த்..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here