கோவில் சொத்துக்களுக்கு நியாயமான வாடகையை நிர்ணயிக்கும்படி, அறநிலையத்துறை கமிஷனருக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.
ஈரோடு மாவட்டம், பெருந்துறையில், கொங்கு வெள்ளாளர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி உள்ளது. பெருந்துறையில் உள்ள செல்லாண்டியம்மன் கோவிலுக்கு சொந்தமான, 4.02 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு பெற்று, 1982ல் பள்ளி துவங்கப்பட்டது. குத்தகை நிலம் தவிர்த்து, கூடுதலாக 2.50 ஏக்கர் நிலத்தையும் விளையாட்டு மைதானமாக பயன்படுத்தி வருகிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பள்ளி நிர்வாகத்துக்கு, 2018 ஜூலையில், ‘நோட்டீஸ்’ அனுப்பினார். இதை எதிர்த்து, பள்ளி நிர்வாகம் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.
மனுவை, நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் விசாரித்தார். அறநிலையத்துறை சார்பில், வழக்கறிஞர் அருண் நடராஜன் ஆஜரானார்.
நீதிபதி பிறப்பித்த உத்தரவு: கோவில் சொத்துக்களுக்கு நியாயமான வாடகையை நிர்ணயிக்கும்படி, அனைத்து அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கையை, அறநிலையத்துறை கமிஷனர் பிறப்பிக்க வேண்டும். வாடகை மறு நிர்ணயம்; கூடுதல் வாடகையை, மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை நிர்ணயம் செய்வதை, கமிஷனர் உறுதி செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.