காங்கிரஸ் கட்சியின் நிலையை பற்றி விவாதிக்க சோனியாவுக்கு குலாம் நபி ஆசாத் கடிதம்.

0
936

காங்கிரஸ் கட்சியின் தற்போதைய நிலை குறித்து விவாதிக்க உடனடியாக செயற்குழு கூட்டத்தை கூட்ட வேண்டி சோனியாவுக்கு குலாம் நபி ஆசாத் கடிதம்.


பஞ்சாப் மாநில காங்கிரஸில் உட்கட்சி பூசல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. மாநில தலைவர் பதவியில் இருந்து நவ்ஜோத் சிங் சித்து ராஜினாமா செய்துள்ளார். பின்னர் அமரீந்தர் சிங் மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசியுள்ளார்.

கோவா முன்னாள் முதல்வர் லுாயிசினோ பெலேரோ கேரளாவின் மூத்த காங்கிரஸ் தலைவர் வி.எம்.சுதீரன் உள்ளிட்ட பலர் கட்சியில் இருந்து விலகி உள்ளனர். பல்வேறு மாநிலங்களிலும் கட்சி பின்னடைவை சந்தித்து வருவதை அடுத்து உடனடியாக செயற்குழு கூட்டத்தை கூட்டி கட்சியின் நிலை குறித்து விவாதிக்குமாறு மூத்த காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத் தற்காலிக தலைவர் சோனியாவுக்கு கடிதம் எழுதி உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here