இலங்கை ஹிந்துக்கள் இந்து சமய பாதுகாப்பு பேரவை

0
605

தமிழை வைத்து அரசியல் செய்பவர்கள்தான் இலங்கையை சேர்ந்த ஹிந்துக்களின் பிரச்சனைகளை இலங்கைத் தமிழர்கள் பிரச்சனை என்று கூறி ஆதாயம் தேடி வருகின்றனர். அதனை இங்குள்ள பலரும் நம்பியும் வருகின்றனர். ஆனால் உண்மையில், இலங்கையைச் சேர்ந்த தமிழர்களே, தங்களை ஹிந்துக்கள் என்றுதான் கூறிவருகின்றனர். அங்குள்ள ஹிந்துக்கள் மீது கிறிஸ்தவ மிஷனரிகளும் முஸ்லிம் மதத்தினரும் நிகழ்த்திவரும் மதமாற்றம் என்ற தாக்குதல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கிறிஸ்தவர்கள் அங்கு புகழ் பெற்ற பல ஹிந்து ஆலயங்களை தகர்த்துவிட்டு சர்சுகளை கட்டியுள்ளனர். இதனை மறைக்கவே இலங்கைத் தமிழர்கள் பிரச்சனை கிளப்பப்படுகிறது என்ற வாதமும் உண்டு. இந்நிலையில், இலங்கையில் வாழும் ஹிந்துக்கள் மீதான கிறிஸ்தவ மிஷனரிகளின் தாக்குதலைக் கண்டித்தும், ஹிந்துக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும் கடந்த செப்டெம்பர் 28ம் தேதி இலங்கை ஹிந்துக்கள் சார்பில் மாபெரும் விழிப்புணர்வுக் கூட்டம் நடத்தப்பட்டது. இலங்கையைச் சேர்ந்த பிரபல ஆன்மீகப் பெரியவர்கள், ஹிந்து இயக்கத் தலைவர்கள், பொதுமக்கள் கலந்துகொண்ட இந்தக் கூட்டத்தை ‘இந்து சமய பாதுகாப்பு பேரவை’ ஒருங்கிணைத்து நடத்தியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here