பரிவர்த்தன் முன்முயற்சி

0
420

இந்தியன்ஆயில் நிறுவனம் சிறைவாசிகளின் வாழ்க்கை மேம்பாட்டிற்காக முன்முயற்சியாக ‘பரிவர்த்தன்’ என்ற திட்டத்தை துவங்கியது. பத்து மாநிலங்களின் 17 சிறைச்சாலைகளில் உள்ள சிறைவாசிளுக்கு விளையாட்டு பயிற்சி அளிக்க வழிவகை செய்துள்ளது. சிறைவாசிகளின் உடல் நலத்தையும் மனநலனையும் பேணும் வகையில், அவர்களுக்கு கூடைப்பந்து, பேட்மின்ட்டன், கைப்பந்து, சதுரங்கம், டென்னிஸ், டேபிள் டென்னிஸ் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளில் தேவையான பயிற்சிகள், உபகரணங்கள் வழங்கப்படும். சர்வதேச அளவிலான விளையாட்டு வீரர்களும் இந்த முயற்சியில் தோள் கொடுக்க தயாராக உள்ளனர். தற்போது தமிழகம், ஆந்திரா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் போன்ற பல மாநிலங்களின் பெட்ரோல் விற்பனை நிலையங்களில், தங்கள் சிறைக்காலத்தை முடித்து வெளியே வந்த சிறைவாசிகளை இந்தியன் ஆயில் நிறுவனம் பணிக்கு அமர்த்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here