மின் இழப்பை குறைக்கும் முயற்சி

0
412

தற்போது நடைமுறையில் உள்ள மின்துறை சீர்த்திருத்தங்களின் முக்கிய நடவடிக்கையாக, குறிப்பிட்ட கால இடைவெளி அடிப்படையில் எரிசக்தி கணக்கிடுதலை மின்சார விநியோக நிறுவனங்களுக்கு மின்சார அமைச்சகம் கட்டாயமாக்கி உள்ளது. இதற்கான விதிமுறைகள் எரிசக்தித் திறன் குழுவால் வெளியிடப்பட்டது. அதன்படி, எரிசக்தி விநியோக நிறுவனங்கள் 60 நாட்களுக்கு ஒருமுறை சான்றிதழ் பெற்ற எரிசக்தி நிர்வாகி மூலம் எரிசக்தியை கணக்கிடுதல் கட்டாயம். இதே போல் அரசு அங்கீகாரம் பெற்ற சுயேச்சையான எரிசக்தி கணக்குத் தணிக்கையாளர் மூலம் வருடாந்திர எரிசக்தி கணக்கீடும் செய்யப்பட வேண்டும். இந்த 2 அறிக்கைகளும் பொதுத் தளத்தில் வெளியிடப்பட வேண்டும். நுகர்வோரின் பல்வேறு வகையினரால் பயன்படுத்தப்படும் மின்சாரம் பற்றிய விரிவான தகவல்கள், பல்வேறு பகுதிகளில் மின்சாரம் கொண்டு செல்லுதல், விநியோகத்தில் ஏற்படும் இழப்புகள் பற்றிய தகவல்களும் இந்த அறிக்கையில் இடம்பெறும். அதிகபட்சமான இழப்பு, திருட்டு நடைபெறும் பகுதிகள் இதன் மூலம் கண்டறியப்பட்டு சரிசெய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ள இயலும். இதற்கு பொறுப்பான அதிகாரிகளை கண்டறியவும் இவை உதவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here