மதமாற்றத் தடுப்புச் சட்டம்

0
325

விஷ்வ ஹிந்து பரிஷத் அகில உலக செயல் தலைவர் அலோக்குமார் சென்னையில் அளித்த பேட்டி ஒன்றில், ‘பாரதத்தில் கட்டாய மதமாற்றத்தின் மூலம் மதம் மாறுபவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரிக்கிறது. அதனைத் தடுக்க 11 மாநிலங்கள் சிறப்பு சட்டம் இயற்றியுள்ளன. இத்தடைச் சட்டம் தேசம் முழுவதும் கொண்டு வரப்பட வேண்டும். இதற்காக மத்திய அரசை வி.ஹெச்.பி வலியுறுத்தி வருகிறது. தமிழகத்தில், போலி வாக்குறுதிகள், பணம், மிரட்டல் மூலம் மதமாற்றம் நடக்கிறது. அதனை தடுக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள ஹிந்துமதத் தலைவர்களை சந்தித்து வலியுறுத்துகிறோம். தமிழக அரசு ஹிந்து கோயில் நகைகளை உருக்கும் முயற்சி கண்டிக்கத்தக்கது. இது பக்தர்களின் மத நம்பிக்கையை சார்ந்தது. இதனை தி.மு.க அரசு கைவிட வேண்டும். மாநில அரசு ஹிந்து கோயில்கள் மீது உரிமை கொண்டாடக்கூடாது. ஹிந்து கோயில்கள், மடங்களை ஹிந்து சமுதாயத்திடம் ஒப்படைக்க வேண்டும். இதற்கான நாடு தழுவிய முயற்சியை வி.ஹெச்.பி மேற்கொள்ளும்’ என கூறினார். அவரது சுற்றுப் பயணத்தின்போது, காஞ்சி சங்கராச்சாரியார், தமிழக கவர்னர், உட்பட பல சமயப் பெரியோர், சமூகப் பெரியோர்களை சந்தித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here