11 நாடுகளுடன் ஒப்பந்தம்

0
586

பாரத அரசு அல்லது உலக சுகாதார நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசிகளை முழுவதுமாக செலுத்திக்கொண்ட பாரத குடிமக்களுக்கு கொரோனா பரிசோதனை, வீட்டு தனிமைப்படுத்தல்களில் இருந்து விலக்கு அளிக்கும் விதத்தில், இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, நேபாளம், பெலாரஸ், ​​லெபனான், ஆர்மீனியா, உக்ரைன், பெல்ஜியம், ஹங்கேரி, செர்பியா ஆகிய 11 நாடுகளுடன் பாரதம் ஒப்பந்தத்தை செயல்படுத்தி உள்ளது. அதற்கு ஈடாக, இதே நடவடிக்கையை பாரதமும் பரஸ்பரம் கடைபிடிக்கும். திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களின்படி தடுப்பூசி 2 டோஸ்கள் முழுமையாக செலுத்திக்கொண்டவர்கள் எவ்வித பரிசோதனையும் இன்றி விமான நிலையத்தை விட்டு வெளியேற அனுமதிக்கப்படுவார்கள். இருப்பினும், அவர்கள் எதிர்மறை ஆர்.டி – பி.சி.ஆர் அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டியது அவசியம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here