ஆப்கானிஸ்தானில் எஞ்சியுள்ள சீக்கியர்கள் மீது தலிபான்கள் சமீபகாலமாக தாக்குதல் நடத்தி வருகின்றனர். கடந்த அக்டோபர் 5ம் தேதி அன்றுகூட அங்குள்ள குருத்வாராவில் நுழைந்து தாக்குதல் நடத்தினர். சமீபத்தில் 20 தலிபான் பயங்கரவாதிகள் அங்குள்ள சீக்கியர்களிடம், உடனடியாக சன்னி முஸ்லிம் பிரிவுக்கு மதம் மாற வேண்டும் இல்லையெனில் ஆப்கனைவிட்டு வெளியேற வேண்டும் என இறுதி எச்சரிக்கை விடுத்து சென்றுள்ளனர். இதுகுறித்து கருத்துத் தெரிவித்த வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி, கடந்த ஆண்டு, ஆப்கானிஸ்தானில் உள்ள 383 இந்து, சீக்கிய சமூகங்கள் திரும்புவதற்கு பாரத அரசும் காபூல் தூதரகமும் உதவியது. பாரதம், ஆப்கன் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது. ஆப்கானிஸ்தான் நிலைமை கவலைக்குரியது. அங்குள்ள சீக்கியர்கள், ஹிந்துக்களுடன் தொடர்பில் உள்ளது என தெரிவித்தார்.