தயார் நிலையில் சேவா பாரதி

0
594

கேரளாவில் வரும் நாட்களில் கனமழை பெய்யும் என்று கூறப்பட்டதை அடுத்து, கேரளாவில் இடுக்கியில் உள்ள பெரிய அணையின் ஷட்டர்கள் திறக்கப்பட்டன. தண்ணீர் எர்ணாகுளம் மாவட்டத்தை வந்தடையும் நிலையில், எந்தவிதமான பாதகமான சூழ்நிலையையும் எதிர்கொள்ள சேவா பாரதி முழுமையான ஏற்பாடுகளைச் செய்துள்ளது. சேவா பாரதியின் 40 பேர் கொண்ட தன்னார்வலர்கள் குழு, முழுநேர அடிப்படையில் ஆலுவா ஏரியின் கரையில் நிறுத்தப்பட்டுள்ளனர். மேலும், நான்கு படகுகள் மற்றும் நான்கு ஆம்புலன்ஸ்கள் நதிக்கரையில் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இப்பகுதியில் வெள்ளம் ஏற்பட்டால், மீட்புப் பணிகளை மேற்கொள்ள சேவா பாரதி 10 ஆயிரம் மீட்டர் நீளமுள்ள கயிறுகளையும் தயார் செய்துள்ளது. மக்களை மீட்க ஏதுவாக இந்த கயிறுகள் மரங்களில் பிணைக்கப்பட்டுள்ளன. மீட்பு நடவடிக்கைகளில் முன்னணியில் இருக்கும் இந்த சேவா பாரதி தொண்டர்கள் பேரிடர் மேலாண்மையில் சிறப்பு பயிற்சி பெற்றவர்கள். ஒருவேளை வெள்ள நிலைமை மோசமடைந்தால், மேலும் அதிக தன்னார்வலர்களும் படகுகளும் தேவைக்கு ஏற்ப மீட்புப் பணியில் ஈடுபடுவார்கள் என்று சேவா பாரதி தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here