பத்மஸ்ரீ சாச்சா முஹம்மத் ஷெரீப்: ஒரு கர்மயோகி

0
428
பத்மஸ்ரீ சாச்சா முஹம்மத் ஷெரீப்:
ஒரு கர்மயோகி:
உத்திரபிரதேசம் அயோத்தியில் பிறந்தவர். சைக்கிள் பழுது நீக்கும் தொழில் செய்து வருகிறார். இவரது மூத்த மகன் முஹம்மத் ரைஸ் கான் 1992 ஆம் வருடம் சுல்தான்பூர் சென்று திரும்பும் போது அடையாளம் காண முடியாத நபர்களால் படுகொலை செய்யப்பட்டு அவரது உடல் சாலையில் கிடந்தது. அவரது உடலை தெரு நாய்கள், கழுகுகள் கொத்திக் குதறி விட்டன. இதனால் மிகவும் மனம் உடைந்து போன முஹம்மத் ஷெரீப் உறுதிமொழி ஒன்றினை எடுத்து அதை இன்று வரை செயல்படுத்தி வருகிறார். தனது மகனின் உடலுக்கு நேர்ந்த நிலைமை வேறு எவருக்கும் ஏற்படக் கூடாது என்று தீர்மானம் செய்து அப்போது முதல் ஆதரவற்ற பிணங்களைப் பெற்று அவரவர் மத வழக்கப்படி சடங்குகள் செய்து தகனம், அடக்கம் செய்து வருகிறார் சாச்சா ஷெரீப். இதுவரை சுமார் 25000 ஆதரவற்ற பிணங்களை அடக்கம் செய்துள்ளார். மருத்துவமனைகள், ரயில் நிலையங்கள் போன்ற இடங்களில் இறந்து போன மனிதர் களின் உறவினர்கள் எவரும் வராத நிலையில் 72 மணி நேரத்திற்குப் பிறகு காவல்துறை அனுமதியுடன் அந்த உடல்களைப் பெற்று அடக்கம் செய்து வருகிறார். இவர் சாதாரண சைக்கிள் பழுது பார்க்கும் தொழில் செய்வதால் பண வசதியும் கிடையாது. ஆனால் மனதில் உறுதி உள்ளது. எடுத்த சபதத்தை எப்படியாவது நிறைவேற்ற வேண்டும். தெரிந்தவர்களிடம், வசதி படைத்தவர்களிடம் நிதி திரட்டித்தான் பல பிணங்களை அடக்கம் செய்து வருகிறார். இவரது செயலை கவுரவிக்கும் விதத்தில் பத்மஸ்ரீ பட்டம் இவருக்கு வழங்கபட்டுள்ளது. பொது வாழ்க்கையில் ஈடுபடுவோர்க்கு இவரது செயல் ஒரு நம்பிக்கை ஒளி ஆகும். சாச்சா ஷெரீப் ஐ நாமும் பாராட்டுவோம்.
தகவல்: சடகோபன் ஜி
#Padmashree || #bharat #india

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here