தேடுதல் வேட்டை

0
747

மணிப்பூர் மக்கள் விடுதலை ராணுவம் மற்றும் மணிப்பூர் நாகா மக்கள் முன்னிலை ஆகிய இரு பயங்கரவாத இயக்கங்கள் நடத்திய தாக்குதலில் 46 அஸ்ஸாம் ரைபிள்சின் கமாண்டிங் அதிகாரி, அவரது குடும்பம், பாதுகாப்பு வீரர்கள் என 7 பேர் உயிரிழந்துள்ளனர். மணிப்பூரின் சுராசந்த்பூர் மாவட்டத்தில் உள்ள செக்கான் எனும் கிராமத்திற்கு அருகே அதிகாரியின் வாகனம் சென்று கொண்டிருந்த போது கண்ணிவெடிகள் மூலம் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த பயங்கரவாத சம்பவத்தில் ஈடுபட்ட பயங்கரவாதிகளை வீழ்த்த தற்போது மாபெரும் ஆபரேஷன் தொடங்கப்பட்டுள்ளது. மியான்மர் எல்லையிலும் ராணுவ வீரர்கள் அந்த பயங்கரவாதிகள் தப்பித்து எல்லை தாண்டாத வண்ணம் காவல் காத்து வருகின்றனர். இந்த தாக்குதலுக்கு பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்புத்துறை அமைச்சர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here