கே.ஆர்.மல்கானி நூற்றாண்டு

0
546
கேவல்ராம் ரத்தன்மால் மல்கானி எனும் கே.ஆர்.மல்கானி துணிச்சல், தைரியம், நேர்மை, அடக்குமுறைக்கு அடிபணியாமல் செயல்பட்ட பத்திரிகையாளர். பாக்கிஸ்தானில் இருக்கும் சிந்து மாகாணம் ஹைதராபாத்தில் பிறந்தவர்.
1975 ஜூன் 25 நள்ளிரவு நெருக்கடி நிலை அறிவித்த பிறகு முதலில் கைது செய்யப்பட்டவர். 1977 மார்ச் இல் பொதுத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு கடைசியாக சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டவர் கே.ஆர்.மல்கானி. ஆர்கனைசர் ஆங்கில வார இதழ், மதர் லாண்ட் ஆங்கில நாளிதழின் ஆசிரியராக பணியாற்றியவர். பல நூல்கள் எழுதியுள்ளார்.
நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக 5 வருடம் செயல்பட்டவர். புதுவை யூனியன் பிரதேச துணை நிலை ஆளுநராக பதவியில் இருந்தபோதே அங்கு காலமாகி விட்டார். மிகவும் எளிமையானவர். இவ்வருடம் அவரது நூற்றாண்டு.
தகவல்: சடகோபன் ஜி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here