அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் உள்ள ஸ்ரீ ஸ்வாமிநாராயண் மந்திர் என்ற ஹிந்து கோயில் அதன் கட்டுமானப் பணிகளுக்காக, மனித கடத்தல், கட்டுமான தளத்தில் கட்டாயமாக வேலை செய்யவைத்து உழைப்பை சுரண்டுதல், கோயிலைக் கட்டும் பணியில் 1 அமெரிக்க டாலருக்கும் குறைவான கூலியில் வேலை செய்யத் தள்ளப்பட்ட பணியாட்கள் போன்ற பொய்யான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு பதில் அளித்துள்ள கோயில் நிர்வாகம், ‘சேவையின் மூலம் வழிபாடு பக்தியின் ஒருங்கிணைந்த பகுதி. மேலும் கோயில் கட்டும் பணியில் உலகம் முழுவதிலுமிருந்து தன்னார்வலர்கள் விரும்பியே பங்களிக்கின்றனர். கோயில் கட்ட R-1 விசாவின் மூலம் பணியமர்த்தப்பட்ட கைவினைஞர்களில் பலர் வீடு திரும்பிவிட்டனர். சிலர் அமெரிக்காவில் உள்ள மற்ற கோவில்களில் பணி செய்ய விரும்பி அங்கு சென்றுள்ளனர். வழிபாட்டாளர்கள், பார்வையாளர்கள், தன்னார்வலர்களின் பாதுகாப்பிற்காக போடப்பட்ட பாதுகாப்பு வேலிகளும் காவலர்களும் இதுவரை கைவினைஞர்கள் உட்பட யாரும் வெளியேறுவதை தடுத்தது இல்லை. கோயில் நிர்வாக எந்த மனித கடத்தலிலும் ஈடுபடவில்லை’ என தெரிவித்துள்ளது.