துப்பாக்கி முனையில் மொத்த ஆப்கானிஸ்தானையும் தலிபான்கள் கைப்பற்றிய போதிலும், அவர்களுக்கு தடை விதிக்கப்பட்ட பகுதிகளும் அங்கு இருக்கத்தான் செய்கின்றன. நங்கர்ஹர் மாகாணம், இது ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் துணை அமைப்பான ஐ.எஸ்.ஐ.எஸ் – கே’வின் கோட்டையாக கருதப்படுகிறது. சுமார் 55,000 மக்கள்தொகை கொண்ட நங்கர்ஹர் மாகாணத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ் – கே அமைப்பினர் தினமும் பல கொடூர குற்றங்களை நிகழ்த்தி வருகின்றனர். அங்கு ஒருவராவது தினமும் கொல்லப்படுகிறார். பெண்கள் கொடுமைபடுத்தப்படுகின்றனர். தலிபான் படை வீரர்கள்கூட இந்த இடத்திற்கு செல்ல அஞ்சுகின்றனர். தலிபான்களால் வேட்டையாடப்படும் முன்னாள் ஆப்கனின் படைவீரர்கள் தங்களின் வாழ்வாதாரம் கருதி ஐ.எஸ்.ஐ.எஸ்சுடன் இங்கு இணைந்துள்ளனர் என ஆப்கனில் உள்ள ஆஸ்திரேலிய பத்திரிகையாளர் ஹோலி மெக்கே கூறியுள்ளார்.