பி.எப்.ஐ பயங்கரவாதி கைது

0
559

பாலக்காடு எலப்புள்ளி பகுதியை சேர்ந்த ஆர்.எஸ்.எஸ் பொறுப்பாளர் சஞ்சீத், கடந்த நவம்பர் 15 அன்று தனது மனைவி கண் எதிரிலேயே சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார். .இந்த படுகொலையை கண்டித்து மலப்புல்லாவில் அளவில் முழு அடைப்பும் நடந்தது. இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த படுகொலைக்கு ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க, ஹிந்து அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தன. வழக்கு விசாரணையில் மாநில அரசு போதிய அக்கறை காட்டவில்லை எனவும் உடனடியாக என்.ஐ.ஏ விசாரணை கோரியும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு பா.ஜ.கவினர் கடிதம் எழுதினர். இதனை தொடர்ந்து மாநில காவல்துறை தீவிரமாக விசாரிக்க துவங்கியது. இக்கொலையில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா (பி.எப்.ஐ) என்ற முஸ்லிம் பயங்கரவாத ஆதரவு அமைப்பின் நிர்வாகி ஒருவர் நேரடியாக ஈடுபட்டது தெரிய வந்தது. அந்த பயங்கரவாதியை கேரள காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஆனால் அவரது பெயர் விவரத்தை அவர்கள் வெளியிடவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here