குமரி மாவட்டம் மண்டைகாடு பகவதி அம்மன் கோயிலில் சில மாதங்களுக்கு முன் தீ விபத்து ஏற்பட்டது. அதற்கு பிறகு அதனை சரி செய்ய, பாரம்பரிய முறைப்படி தெய்வ பிரசன்னம் பார்த்து, வாஸ்து பூஜை செய்த பிறகே திருப்பணிகளை ஆகம விதிப்படி முழுமையாக செய்ய வேண்டும் என்பது மரபு. ஆனால் அப்படி இப்பணிகளை மேற்கொண்டால் சுமார் 3 கோடி செலவாகும். இதனால் ஆகம விதிகளை மீறி, வெறும் 95 லட்ச ரூபாய் செலவில் மேற்கூரையை மட்டும் மாற்றி அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்ட ஹிந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு சென்றார். இதனை முன்னிட்டு கோயிலுக்குள் பக்தர்கள் தரிசனத்துக்கும் தடை விதிக்கப்பட்டது. கோயிலில் ஆகம விதிகளை மீறி மேற்கூரை அமைக்கக்கூடாது என போராடிய விஷ்வ ஹிந்து பரிஷத் உள்ளிட்ட ஹிந்து அமைப்பினர் காவல்துறையால் கைது செய்யப்பட்டனர். முறைப்படி என்று இதன் மூலம் தி.மு.க ஹிந்துக்களுக்கு எதிரான கட்சி என்பது மீண்டும் நிருபிக்கப்பட்டுள்ளது.