ஹிந்தியில் மருத்துவம், இன்ஜி., படிப்புகள்: யோகி ஆதித்யநாத்

0
195

லக்னோ: மத்திய பிரதேசத்தை தொடர்ந்து, உத்தரபிரதேச மாநிலத்தில் ஹிந்தி மொழியில் மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளை கற்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

நாட்டிலேயே முதன்முறையாக மத்திய பிரதேசத்தில் சமீபத்தில் ஹிந்தி மொழியில் மருத்துவக்கல்வி பாடத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஹிந்தி மொழி மருத்துவ படிப்புகளை அறிமுகப்படுத்தினார்.

இதனைத்தொடர்ந்து பா.ஜ., ஆளும் மற்ற மாநிலங்களிலும் ஹிந்தி மொழி பாடத்திட்டங்களை கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், பா.ஜ., ஆளும் உத்தரபிரதேச மாநிலத்தில் ஹிந்தி மொழியில் மருத்துவம் மற்றும் இன்ஜினியரிங் பாடத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும் என அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், ‛உ.பி.,யில் மருத்துவம் மற்றும் இன்ஜினியரிங் படிப்புகளில் சில பாடத்திட்டங்கள் ஹிந்தியில் மொழிப்பெயர்க்கப்பட்டுள்ளன. இந்த ஹிந்தி மொழி பாடத்திட்டங்கள் அனைத்தும் பல்கலைகளில் அடுத்தாண்டு முதல் நடைமுறைக்கு வரும்’ எனத் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here