மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையின் கீழ் இயங்கும் ஆர்யபட்டா ஆய்வு மையத்தின் வானியலாளர்கள் 2015 முதல் கருந்துளை அமைப்பை ஆராய்ந்து வருகின்றனர். இவர்கள், பத்து டிரில்லியன் சூரியன்களுக்குச் சமமான இயல்பைவிட 10 மடங்கு அதிக எக்ஸ்ரே உமிழ்வைக் கொண்ட செயல்பாட்டில் உள்ள விண்மீன் ஒன்றை கண்டறிந்துள்ளனர். ஐந்து பில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் இது அமைந்துள்ளது, தீவிர ஈர்ப்பு விசையில் துகள்கள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதை ஆராயவும், ஆரம்பகால பிரபஞ்சத்தில் விண்மீன் திரள்களின் பரிணாம வளர்ச்சியில் ஈர்ப்பு விசையின் பங்கை ஆய்வு செய்யவும் இது உதவும் என கருதப்படுகிறது.