பாகிஸ்தானில் கொடூரம்:இலங்கையை சேர்ந்தவர் மத அடிப்படை வாதிகளால் தீயிட்டு கொலை

0
473

பாகிஸ்தானில் உள்ள சியால்கோட்டில் இலங்கை தொழிற்சாலையின்  மேலாளர் ஒருவர் “தெஹ்ரீக்-இ-லப்பைக்”(TLP) அமைப்பை சேர்ந்த கும்பலால் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். கொலையை நியாயப்படுதுவதற்காக மத நிந்தனை செய்தார் என்ற பொய்யான குற்றச்சாட்டை அவர் மீது அந்த அமைப்பு சுமதி உள்ளது. . TLP சமீபத்தில் அரசாங்கத்தால் தடைசெய்யப்பட்டது. இந்த செய்தியை  “தி பாகிஸ்தான் டெய்லி” ஆசிரியர் ஹம்சா அசார் சலாம் வெளியிட்டுள்ளார்.

சியால்கோட்டில் (பாகிஸ்தான்) முஸ்லிம்களின் கொலைகாரக் கும்பல், இலங்கையைசேர்ந்த ஒருவரை மத நிந்தனை செய்ததாகக் குற்றம் சாட்டி உயிருடன் எரித்துக் கொன்றது. பிரியந்த குமார என அடையாளம் காணப்பட்ட இலங்கையைசேர்ந்த அந்த நபர், ராஜ் கோ தொழிற்சாலையில் ஏற்றுமதி பிரிவு மேலாளராக பணி புரிந்து வந்தார்.

மதச் சிறுபான்மையினர் அரசியல் சாசனத்தின் கீழ் அவர்களுக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள மதச் சுதந்திரம் அல்லது நம்பிக்கையை அனுபவிக்க முடியவில்லை. பஞ்சாபில் அஹமதியா சமூகத்தைச்சேர்ந்தவர்களின் பல வழிபாட்டுத் தளங்கள் இடிக்கப்பட்டுள்ளன. சிந்து மற்றும் பஞ்சாபில் உள்ள இந்து மற்றும் கிறிஸ்தவ சமூகங்களைச்சேர்ந்வர்கள் கட்டாய மதமாற்றங்களுக்கு ஆளாவதாக தொடர்ந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

“பஞ்சாபில், 14 வயதுக்குட்பட்ட சிறுமிகள் வலுக்கட்டாயமாக மதமாற்றம் செய்யப்பட்டு, கட்டாயத் திருமணத்திற்கு உட்படுத்தப்பட்டனர்” என்று மே 2020 இல் வெளியிடப்பட்ட அப்சர்வர் ரிசர்ச் பவுண்டேஷன் (ORF) அறிக்கை குறிப்பிடுகிறது.

இந்த ஆண்டு செப்டம்பர் 26 அன்று உலக அமைதிக்கான அமைப்பு வெளியிட்ட அறிக்கையின்படி, “பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியில் இருந்து பாகிஸ்தானில் மத நிந்தனைச் சட்டங்கள் இருந்து வருகின்றன. நிந்தனை தண்டனைச் சட்டத்தின் பிரிவு 295-C , நபி அல்லது குர்ஆனுக்கு எதிராக இழிவாய்க்கூறும் எவருக்கும் தண்டனை விதிக்கிறது. பெரும்பாலான மத சிறுபான்மை குழுக்கள் எந்த ஆதாரமும் இல்லாமல் இந்த சட்டத்தின் கீழ்  தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்டு வன்முறைகளுக்கு ஆளாகின்றனர்.

இந்த விவகாரம் முழுமையாக விசாரிக்கப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என்று பாகிஸ்தானின் பஞ்சாப் முதல்வர் உஸ்மான் புஸ்தார் கூறியுள்ளார்.

“எவரும் சட்டத்தை தங்கள் கைகளில் எடுக்க அனுமதிக்கப்படவில்லை. இந்த மனிதாபிமானமற்ற செயலில் ஈடுபட்டுள்ள நபர்கள் தப்ப முடியாது!!” என்று அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

குமாரை தீயிட்டுக் கொளுத்திய உடனேயே அவர் இறந்துவிட்டதாக சில ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here