சிவாஜிக்கு எதிராக புலிகேசி

0
338

வலதுசாரிகள் தேசத்தின் வீரம், தேசப்பற்று குறித்து போஎசுகையில் அடிக்கடி எடுத்துக்காட்டு கூறும் பெயர் மராட்டிய மன்னன் சத்ரபதி சிவாஜி. இதற்கு எதிர்வினையாற்ற கர்நாடக இடதுசாரிகளும் மதச்சார்பற்றவர்கள் கூட்டமும் இணைந்து முன்னெடுத்திருக்கும் மற்றொரு அரசர் சாளுக்கிய மன்னர் இரண்டாம் புலிகேசி. கர்நாடகாவில் நமது பிராந்திய அரசர்களின் சிலைகளைவிட அதிகமாக, வெளியாட்களின் சிலைகள் உள்ளன. நமது பூர்வீக ஆட்சியாளர்களான கிருஷ்ண தேவராயர், இரண்டாம் புலிகேசி போன்றவர்களை நாம் நினைவில் கொள்ள வேண்டும் என பிரச்சாரம் செய்கின்றனர். காவிக்கொடிகளில் புலிகேசியின் படம் அச்சிடும் அளவிற்கு சென்றுள்ளது  அவர்களின் முயற்சி. இது வரவேற்கத்தக்கதே என வலதுசாரிகள் தெரிவிக்கின்றனர். காரணம், இந்த கும்பல்கள், ஒரு ஹிந்து மன்னரை மற்றொரு ஹிந்து மன்னருக்கு எதிராக காட்ட விரும்பினாலும்,  நமது வரலாற்று பாடப்புத்தகங்களில் மறக்கடிக்கப்பட்ட மாபெரும் வீரர்களை மக்களிடம் கொண்டுசேர்க்க இவர்கள் உதவி செய்கின்றனர். இது, திப்புசுல்தான் போன்ற மதவெறியர்களை சுதந்திரப் போராட்ட வீரர்களாக காட்டும் இவர்களின் முயற்சியைவிட உன்னதமானது. இனியாவது சாளுக்கியர்கள், ராஷ்டிரகூடர்கள், சேர, சோழ பாண்டியர்கள்,பல்லவர்கள், குப்தர்கள் உள்ளிட்டோரை இவர்கள் நினைவுகூரட்டும்’ என்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here