இமயமலைப் பகுதியையும் மனதில் வைத்து விவசாயக் கொள்கை வகுக்கப்பட வேண்டும்-பாரதிய கிசான் சங்கம் கோரிக்கை

0
472

இமாச்சல பிரதேச தலைநகர் சிம்லா,விகாஸ்நகரில் உள்ள சரஸ்வதி வித்யா மந்திரில் அகில பாரதிய கிசான் சங்கத்தினுடைய மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் பைடேக் டிசம்பர் 5 மற்றும் 6 ம் தேதி ஆகிய இரு நாட்கள் நடைபெற்றன. நிறைவில், பாரதிய கிசான் சங்கத்தின் அகில இந்திய அமைப்பாளர் தினேஷ் குல்கர்னி, இமயமலைப் பகுதிகளை மனதில் வைத்து விவசாயக் கொள்கையை உருவாக்க வேண்டும் என்றார்.

      மலைவாழ் மக்கள் தற்போது விவசாயத்தை கைவிட்டு வேறு வேலைக்காக சமவெளிக்கு சென்று வருகின்றனர். இதனால், வரும் காலங்களில் விவசாயத் துறைக்கு இது சவாலாக இருக்கும். மலைப் பகுதிகளில் வாழும் விவசாயிகளுக்கு உறுதியான கொள்கை வகுக்கும் பட்சத்தில், விவசாயம் தொடர்பான பிரச்னைகளை அவர்கள் சந்திக்க வேண்டியதில்லை. விவசாயிகளுக்கு நம்பிக்கை ஏற்படுத்தினால்  அனைத்தையும் செய்ய முடியும்.

      ஆனால் தற்போது பசுமை விவசாயப் புரட்சியால் விவசாயத்தின் கதையே வேறு, விவசாயத் துறையில் பூச்சிக்கொல்லி மருந்துகளை கண்மூடித்தனமாகப் பயன்படுத்துவதால் நிலம் மேலும் நச்சுத்தன்மையுடையதாக மாறி வருகிறது. விதைகள் மற்றும் உரங்கள் வாங்குவதற்கு மிகவும் விலை உயர்ந்துள்ளது என்று கூறினார். பழங்கால இந்திய பாரம்பரியத்தின்படி பசுவை அடிப்படையாகக் கொண்ட இயற்கை விவசாயத்தை பின்பற்றுவது குறித்து பரிசீலிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

டிசம்பர் 06 அன்று நடைபெற்ற மாநாட்டின் நிறைவு விழாவில் இமாச்சலப் பிரதேச ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் தலைமை விருந்தினராக கலந்து கொண்டார். பாரதிய கிசான் சங்கம்  முன்வைத்த அம்சங்கள் மற்றும் “இமயமலைப் பகுதிகளுக்கு ஏற்ற படி விவசாயக் கொள்கைகளை வகுக்க வேண்டும்” என்ற கருத்தினையும் அவர் ஆதரித்தார்.

அதற்கான முயற்சிகளை மேற்கொள்வதாகவும் உறுதியளித்தார். தற்போதைய இந்தியச் சூழலில் விவசாயக் கொள்கையைத் தொடர வேண்டிய அவசியம் இருப்பதாகவும், இன்று பாரதிய கிசான் சங்கம் இதற்கான முயற்சிகளை மேற்கொள்வதில் தான் மகிழ்ச்சி அடைவத்கவும் அவர் தெரிவித்தார். மெக்காலே பிரபுவின் கல்விக் கொள்கையின் விளைவாகவே , நம்மை இந்தியர்களாகக் கருதிக்கொண்டு மேற்கத்திய கலாச்சாரத்தைப் பின்பற்றுவது நடக்கிறது,இது மாற்றப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

 

இந்த பைடேகின் போது, ​​அடுத்த மூன்று ஆண்டுகளுக்கான புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதில், மையத்தின் சார்பில் தேர்தல் அதிகாரி புவன் பிக்ரம் தப்ரால் கலந்து கொண்டார்.

(இமாச்சல பிரதேச) மாநிலத் தலைவராக விவசாய நிபுணர் டாக்டர் சோம்தேவ் சர்மா ஜி ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனுடன், ரோஹ்ருவைச் சேர்ந்த தோட்டகலை வல்லுனரான  சுரேஷ் தாக்கூர் மாநிலப் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். உனா மாவட்டத்தை சேர்ந்த தில்பாக் சிங் பிராந்த பொருளாராகவும் தேர்ந்டுக்கப்பட்டனர்.

 

மாகாண துணைத் தலைவராக ரோஷன்லால் சவுத்ரி மற்றும் கர்ம் சிங் சைனி, வேளாண் விஞ்ஞானிகள் டாக்டர் ஜெய்தேவ், உமேஷ் சூட் மற்றும் பூபேந்திர ராணா ஆகியோர் மாநில அமைச்சராகவும், டாக்டர் நரேந்திர கயாத் அலுவலக அமைச்சராகவும், ஹரிராம் பவார் காரியாலய தலைவராகவும் அமைச்சராகவும், மம்தா ஷர்மா மாகாண மகளிர் முதல்வராகவும், ஜெய் சிங் சைனி தாக்கூர் முதல் மாநில விளம்பர பிரமுக் மற்றும் வழக்கறிஞர் அஜித் சிங் சக்லானிக்கு மாகாண இளைஞர் பிரமுக் பொறுப்பும், பல்வீர் தாக்கூர் மாகாண ஆர்கானிக் தலைவராகவும், பகத் ராம் பாட்டியல் உறுப்பினராகவும், டாக்டர் சுபாஷ் சர்மா விவசாய பொருளாதார ஆராய்ச்சி தலைவராகவும் பொறுப்பேற்றனர்.

நிகழ்ச்சியில், வேளாண் துறையில் சிறப்பாகப் பணியாற்றிய மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் 1980 களில் பாரதிய கிசான் சங்கத்துடன் தொடர்புடைய மூத்த தொழிலாளர்களும் ஆளுநரால் கவுரவிக்கப்பட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here