இந்தியாவில் மத துன்புறுத்தல் என்ற பிரச்சாரத்தை நிராகரித்த அமெரிக்க அரசு

0
297

மத சுதந்திர மீறல்களில் ஈடுபட்டுள்ள இரண்டு வகை நாடுகளின் பட்டியலை அமெரிக்க தயாரித்துள்ளது. இதில் இந்தியாவை சேர்க்காததன் மூலம் இந்தியாவிற்கு எதிராக துஷ்ப்ரச்சாரம் செய்யும் சக்திகளுக்கு பேரிடி விழுந்தள்ளது.

      நவம்பர் 17 அன்று, அமெரிக்க நாட்டின் செயலாளர் ஆண்டனி பிளிங்கன், அமெரிக்க அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ பட்டியலில் இடம் பெற்றுள்ள  மத சுதந்திரத்திற்கு எதிராக செயல்கள் நடக்கும் நாடுகளில் 10 நாடுகளின்  பெயரை குறிப்பிட்டுள்ளார். . வட அமெரிக்காவின் International christian concern, இந்திய கிறிஸ்தவ அமைப்புகளின் கூட்டமைப்பு (FIACONA),, இந்தோ-அமெரிக்கன் முஸ்லீம் கவுன்சில் போன்ற அமைப்புகள் இந்தியாவை “குறிப்பாக கண்காணிக்க வேண்டிய நாடுகளின் பட்டியல்” (CPC) மற்றும்  “பிரத்யேக கண்காணிப்பு பட்டியல”(SWLC) சேர்க்க தீவிர பரப்புரைகள் செய்தன. இந்தியாவில் உள்ள சில நிறுவனங்கள் குறிப்பாக கண்காணிக்க வேண்டிய பட்டியலில் உள்ளன. இருப்பினும், அமெரிக்க அரசாங்கம், கவனமாக மதிப்பாய்வு செய்த பின்னர், அவர்களின் வாதங்களை நிராகரித்துள்ளது.

     மேலே குறிப்பிட்டுள்ளதைப் போன்ற பல அமைப்புகள் பொது இடங்களில் பல கூட்டங்களை நடத்தியது, சர்வதேச மத சுதந்திரத்திற்கான யுனைடெட் ஸ்டேட்ஸ் கமிஷனுக்கு (USCIRF) விரிவான விளக்கங்களை அளித்தது. யு.எஸ்.சி.ஐ.ஆர்.எஃப், இந்தியாவை குறிப்பாக  கண்காணிக்க வேண்டிய நாடாக (CPC) பட்டியலிட அமெரிக்க அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. USCIRF இன் பரிந்துரையை அமெரிக்க அரசாங்கம் நிராகரித்தது, மத சுதந்திரத்திற்கான அரசியலமைப்பு மற்றும் சட்டப்பூர்வ பாதுகாப்பிற்கான  வலுவான கட்டமைப்பை இந்தியா கொண்டுள்ளது என்பதை நிரூபித்துள்ளது.

    கடந்த காலங்களில், “PERSECUTION RELIEF INDIA” போன்ற அமைப்புகள் இந்தியாவிற்கு எதிராக USCIRF-ல் சமர்ப்பித்த வழக்குகள் “PERSECUTION RELIEF INDIA” ஜோடிக்கப்பட்டவை என்பது அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. எந்த மனித சமுதாயத்திலும் நிகழும் சாதாரண குற்றங்களை ‘மததிற்கெதிரான  குற்றங்களாக’ சித்தரித்துக்கொண்டிருந்தது. இதன் விவரம் வருமாறு:

   நவம்பர் 17, 2021 அன்று அமெரிக்க வெளியுறவுத் துறையின் குறிப்பாக கண்காணிக்க வேண்டிய  நாடுகள்(CPC), சிறப்புக் கண்காணிப்புப் பட்டியல் நாடுகள், குறிப்பாக கண்காணிக்க வேண்டிய  நிறுவனங்கள் பற்றிய பிரகடனம்

     1998 ஆம் ஆண்டின் சர்வதேச மத சுதந்திரச் சட்டத்தின் (IRFA) கீழ், உலகில் உள்ள ஒவ்வொரு நாட்டிலும் உள்ள மத சுதந்திரத்தின் நிலையை அமெரிக்க  குடியரசுத் தலைவர் ஆண்டுதோறும் மதிப்பாய்வு செய்ய வேண்டும். மத சுதந்திரத்திற்கெதிரான செயல்களை அனுமதிக்கும் ஒவ்வொரு நாட்டையும் நியமிக்க வேண்டும். குறிப்பாக கண்காணிக்க வேண்டிய நாடுகளின் (CPC) பட்டியலில் சேர்க்க வேண்டும். IFRA  சட்டம் கீழ்கண்ட செயல்பாடுகளை மத சுதந்திரத்திற்கெதிரான செயல்களாய் வரையறுக்கிறது: (1) சித்திரவதை; (2) குற்றச் சாட்டு ஏதும் இல்லாமல் சிறை வைத்தல்  (4) அடிப்படை சுதந்திரம் இல்லாமல் மறுத்தல்.

    Frank R. Wolf International Religious Freedom Act of 2016 (Wolf Act) இன் கீழ், “முந்தைய ஆண்டில் மத சுதந்திரத்திற்கெதிரான செயல்களில் ஈடுபட்டோ அல்லது அதை அனுமதித்தன் மூலம் குறிப்பாக கண்காணிக்க வேண்டிய நாடுகளின் (CPC) பட்டியலில் பெயர் இடம் பெற்றிருந்து அவற்றின் மீது முழுமையாய் நடவடிகை  எடுக்காத நாடுகளை பிரத்யேக கண்காணிப்பு பட்டியலில்(SWLC) பட்டியலிடப்பெறும்.

 

    WOLF சட்டம் மேலும் குறிப்பாக கடுமையான மத சுதந்திர மீறல்களில் ஈடுபட்டுள்ள “அரசு சாராத அமைப்பு”கள் மீது கவனம் செலுத்தி அவற்றை குறிப்பாக கண்காணிக்க வேண்டிய அமைப்பு  (EPC) என்றும் பட்டியலிட வேண்டும் என்றும் கூறுகிறது. WOLF சட்டத்தின் படி, ஒரு “அரசு அல்லாத அமைப்பு” என்பது “(A) குறிப்பிடத்தக்க அரசியல் அதிகாரம் மற்றும் பிராந்திய கட்டுப்பாட்டை செயல்படுத்தும் இறையாண்மை அல்லாத நிறுவனம் என வரையறுக்கப்படுகிறது; (B) இறையாண்மை கொண்ட அரசாங்கத்தின் கட்டுப்பாட்டின் வெளியே இயங்குதல் (C) வன்முறை மூலம் அதன் நோக்கங்களை நிறைவேற்றுதல்.

CPC, SWL  தொடர்பான முழு பொறுப்பையும் அதிகாரத்தை அமெரிக்க நாட்டின் செயலாளரிடம் adhibar ஒப்படைத்துள்ளார்.

குறிப்பாக கண்காணிக்க வேண்டிய  நாடுகள்(CPC)

நவம்பர் 15, 2021 அன்று வெளியிடப்பட்ட இந்த பட்டியலில் உள்ள நாடுகள்

பர்மா, சீன மக்கள் குடியரசு, எரித்திரியா, ஈரான், கொரியா ஜனநாயக மக்கள் குடியரசு, பாகிஸ்தான், ரஷ்யா, சவுதி அரேபியா, தஜிகிஸ்தான், துர்க்மேனிஸ்தான்.

சிறப்பு கண்காணிப்பு பட்டியல் நாடுகள்(SWIL)

நவம்பர் 15, 2021 அன்று வெளியிடப்பட்ட இந்த பட்டியலில் உள்ள நாடுகள்

அல்ஜீரியா, கொமரோஸ், கியூபா மற்றும் நிகரகுவா.

குறிப்பாக   கண் காணிக்கவேண்டிய அமைப்புகள்(EPC)

நவம்பர் 15, 2021 அன்று வெளியிடப்பட்ட இந்த பட்டியலில் உள்ள அமைப்புகள்

– அல்-ஷபாப், போகோ ஹராம், ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம், ஹூதிகள், ISIS, ISIS-கிரேட்டர் சஹாரா, ISIS-மேற்கு ஆப்பிரிக்கா, ஜமாத் நஸ்ர் அல்-இஸ்லாம் வால் முஸ்லிமின், மற்றும் தலிபான்.*

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here