பாதுகாப்பு தலைமை அதிகாரி பிபின் ராவத்தின் மறைவிற்கு ஆர்.எஸ்.எஸ். அஞ்சலி

0
291

        பிபின் ராவத்தின் மறைவுக்கு ஆர்எஸ்எஸ் சர்கார்யவா ஸ்ரீ தத்தாத்ரேயா ஹோசபாலே இரங்கல் தெரிவித்துள்ளார்.   

        “ஹெலிகாப்டர் விபத்தில் பாதுகாப்புப் படைத் தளபதி ஜெனரல் பிபின் ராவத்தின் திடீர் மறைவு அதிர்ச்சியளிக்கிறது.அது  தேசத்திற்கு பெரும் இழப்பாகும்.

        ஒரு சிறந்த, பாதுகாப்பில் திறமையுடன் வியூகங்களை வகுக்கக்கூடிய உண்மையான தேசபக்தர் மற்றும் திறமையான தலைவரை இழந்துவிட்டது. இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவத்தில் உயிர்நீத்த ஜெனரல் ராவத், அவரது மனைவி மற்றும் ராணுவ வீரர்களுக்கு ஆர்எஸ்எஸ் நெஞ்சார்ந்த அஞ்சலி செலுத்துகிறது.

       ஜெனரல் பிபின் ராவத் தனது வாழ்க்கையை தேசபக்திக்காக அர்ப்பணித்து முன்மாதிரியாக வழிநடத்தினார். ஐ.எம்.ஏ-வில் கௌரவப் பட்டம் பெற்றதில் இருந்து(Sword of honour) நாட்டின் முதல் தலைமை பாதுகாப்பு அதிகாரி ஆக நியமிக்கப்படுவது வரை – ஜெனரல் ராவத் தேசத்திற்கு செய்த சேவை முன்மாதிரியான எதிர்கால சந்ததியினருக்கு நல்ல முன் மாதிரி ஆகவும் உத்வேகமாகவும்  இருக்கும்.

அவரது சோகமான மறைவுக்கு தேசத்துடன் இரங்கல் தெரிவிக்கிறேன்”.

– தத்தாத்ரேயா ஹோசபலே

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here