295 இடங்களில் நேரடி ஒளிபரப்பு: காசி விஸ்வநாத் வழித்தட திறப்பு விழாவை கொண்டாடும் டெல்லி பா.ஜ.க.

0
324

காசி விஸ்வநாத் வழித்தடத்தின் திறப்பு விழாவை தேசிய தலைநகரின் ஒவ்வொரு நகராட்சி வார்டிலும் நேரடியாக ஒளிபரப்புவதன் மூலம் மாநில டெல்லி பாஜக கொண்டாட ஏற்பாடு செய்துள்ளது. 295 இடங்களில் மாபெரும் திரைகள் மூலம் நிகழ்வை ஒளிபரப்ப ஏற்பாடு  செய்யப்பட்டுள்ளதாக என்று கட்சி தெரிவித்துள்ளது.

    டிசம்பர் 13 ஆம் தேதி வாரணாசியில் நடைபெறும் திறப்பு விழாவில் டெல்லியில் இருந்து சுமார் 500 துறவிகள் மற்றும் பிரபலங்கள் கலந்துகொள்வார்கள் என்று மாநில பாஜக தலைவர் ஆதேஷ் குப்தா தெரிவித்தார்.

   தவிர, உயர்மட்ட நிர்வாகிகள் இருக்கும் கட்சியின் அனைத்து மாவட்ட அலுவலகங்களிலும் இந்த நிகழ்ச்சி ஒளி பரப்பப்படும்.

    இந்த மகத்தான விழாவுக்காக சமய சான்றோர்கள்  மற்றும் பிற முக்கிய பிரமுகர்கள்,மற்றும் வர்த்தகர்கள் மூலம் பிரதமர் நரேந்திர மோடிக்கு வரவேற்பு கடிதம்  அனுப்பப்பட்டு வருகிறது என்றும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here