2001ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி

0
387

  “பாதுகாப்பு வீரர்களின் “உயர்ந்த தியாகம்” நாட்டிற்கு தொடர்ந்து ஊக்கமளிக்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார். 2001ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தாக்குதலின் போது பணியின் போது வீரமரணம் அடைந்த அனைத்து பாதுகாப்புப் படை வீரர்களுக்கும் எனது அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்கிறேன். தேசத்திற்கான அவர்களின் சேவையும் உச்சபட்ச தியாகமும் ஒவ்வொரு குடிமகனுக்கும் ஊக்கமளிக்கிறது” என்று மோடி ட்வீட் செய்துள்ளார்.

  “2001 ஆம் ஆண்டு இதே நாளில், உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான நாடாளுமன்றத்தைக் கொடூரமான பயங்கரவாதத் தாக்குதலுக்கு எதிராகப் பாதுகாத்து உயிர் தியாகம் செய்த துணிச்சலான பாதுகாப்புப் பணியாளர்களுக்கு நான் மரியாதை செலுத்துகிறேன். அவர்களின் உன்னத தியாகத்திற்காக தேசம் என்றென்றும் அவர்களுக்கு நன்றியுடன் இருக்கும்” என்று குடியரசுத் தலைவர் கோவிந்த் ட்விட்டரில் எழுதினார்.

   உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய அமைச்சர்கள் பிரஹலாத் ஜோஷி, கிரண் ரிஜிஜு மற்றும் காங்கிரஸ் தலைவர் கவுரவ் கோகோய் உயிரிழந்த பாதுக்காப்பு படை வீரர்களுக்கு அஞ்சலி செய்தி வெளியிட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here