இயற்கை வேளாண்மை 2 : பஞ்சகவ்யம்

2
844
பஞ்சகவ்யம்

இயற்கை வேளாண்மை 2 :

பஞ்சகவ்யம்

இயற்கை விவசாயம் என்பது பிரபஞ்ச சக்திக்கொண்ட இயற்கை உரங்களை பயன்படுத்தி விவசாயம் செய்வது ஆகும்.நம் முன்னோர்கள் பயன்படுத்திய பாரம்பரிய முறை இதுவே ஆகும்.இதன் மூலம் சுற்றுபுறச் சுழலினை மாசுபடாமல் பாதுகாக்கலாம். மேலும் இது உடல் நலத்திற்கும் ஏற்றது. பக்கவிளைவு வராது.

இந்த இயற்கை விவசாயம் மேலும் விளைசல் அடைய பஞ்சகவ்யம் என்ற பிரபஞ்ச சக்திக்கொண்ட உரக் கலவையை பயன்படுத்துவது நலம். இது நம் முன்னோர்களின் கொடை.

இது ஹிந்து சமயக் கோயில்களில் அபிசேகப் பொருளாகவும், ஆயுர் வேத வைத்தியத்தில் மருந்துப் பொருளாகவும், இயற்கை வேளாண்மையில் பயன்படுத்தப்படுகிறது.

பஞ்ச என்றால் ஐந்து, கவ்யம் என்பது நாட்டுபசுவிலிருந்து கிடைக்ககூடிய பொருள் என்பதாகும்.

பஞ்சகவ்யம் தயாரிப்பு முறை

பசுவிடம் இருந்து பெறப்படும் 5 மூலப்பொருட்கள் மூலம் இந்த காவ்யம் தயாரிக்கப்படுகிறது.

தேவையானப் பொருட்கள்

  1. நாட்டுப் பசுவின் சாணம் – 5 கிலோ
  2. நாட்டுப் பசுவின் கோமியம் – 3 லிட்டர்
  3. நாட்டுப் பசுவின் பால் – 2 லிட்டர்
  4. நாட்டுப் பசுவின் தயிர் 2 லிட்டர்
  5. நாட்டுப் பசுவின் நெய் 1 லிட்டர்
  6. கரும்புச்சாறு – 3 லிட்டர்
  7. இளநீர் – 3 லிட்டர்
  8. வெல்லம் – 2 கிலோ

பசுஞ்சாணம் ஐந்து கிலோவுடள் பசு மாட்டு நெய் ஒரு லிட்டர் கலந்து, ஒரு வாளியில் நான்கு நாட்கள் வைத்து தினமும் காலை, மாலை என இரு முறை இதை பிசைந்துவிட வேண்டும். ஐந்தாவது நாள் மற்ற பொருட்களுடன் இவைகளை ஒரு வாய் அகன்ற மண்பானை தொட்டியில் போட்டு நன்கு கரைத்து, வலையை கொண்டு மூடி நிழலில் வைக்க வேண்டும்.

ஒரு நாளைக்கு இருமுறை வீதம் காலையிலும், மாலையிலும் 20 நிமிடங்கள் கிளறிவிட வேண்டும். இது பிராணவாயுவை பயன்படுத்தி, வாழும் நுண்ணுயிரிகளின் செயல் திறனை ஊக்குவிக்கின்றது. இந்த முறையில் முப்பது நாட்களில் பஞ்சகவ்யம் தயாராகிவிடும்.

பயன்படுத்தும் அளவு

பயிர்களுக்கும், மரங்களுக்கும் பஞ்சகாவ்யா தெளிக்கும் முறை வேறுபடுகிறது. பொதுவாக ஒரு ஏக்கர் பயிருக்கு 3 லிட்டரும், மரங்களுக்கு 5 லிட்டரும் ஒருமுறை தெளிப்பிற்கு தேவைப்படும். பஞ்சகவ்யத்தை 1 லிட்டர் தண்ணீருக்கு 30 மில்லி என்ற அளவில் கலந்து 15-30 நாட்கள் இடைவெளியில் பயிர்களுக்கு தெளிக்க வேண்டும். பஞ்சகவ்யம் கரைசலை எல்லா தானியப் பயிர்களுக்கும், பூச்செடிகளுக்கும், பழ மரங்களுக்கும் தெளிக்கலாம்.

குறிப்பு: நாட்டுப்பசுவின் பஞ்சகவ்வியம் மட்டுமே பயன் அளிக்கும்.

                                                               -நந்திஹனுமன்
                                                nanthihanuman@gmail.com

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here