மகாகவி சுப்ரமணிய பாரதியின் 140வது பிறந்தநாளை முன்னிட்டு ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கம், சென்னை பாரதியார் இல்லத்தில், 11 டிசம்பர் 2021 சனிக்கிழமை அன்று ஒரு சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. இந்நிகழ்ச்சியில் மகாகவி படைப்புகளில் இருந்து இசைக் குறியீடு வெளியிடப்பட்டு அவருக்கு இசையஞ்சலி செலுத்தப்பட்டது.
இசையமைப்பாளர் கலைமாமணி ஸ்ரீ அனில் சீனிவாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்ற்றினார். அவர் பேசுகையில் “நம் தேசத்தின் மீது பாரதி அபார நம்பிக்கை கொண்டிருந்தார்” என்று கூறினார், மேலும் ஒன்றிணைவதும், ஒன்றிணைந்து செயல்படுவதும் மாற்றத்திற்கான அடித்தளத்தை அமைக்கிறது, என்றும் குறிப்பிட்டார்.
ஆர்எஸ்எஸ் அமைப்பின் அகில இந்திய இணைச் செயலாளர் ஸ்ரீ ராம்தத் சக்ரதர் தனது உரையில் மகாகவியின் பெருமையைப் போற்றினார்.
ஸ்ரீ அனில் சீனிவாசன் இசையமைப்பாளர் மற்றும் ஆர்எஸ்எஸ் அகில இந்திய இணைச் செயலாளர் ஸ்ரீ ராம்தத் சக்ரதர் ஆகியோர் ‘கவி பாரதி’ இசைக் குறிப்பை வெளியிட்டனர்.
ஸ்வயம்சேவகர்கள் மகாகவிக்கு இசை அஞ்சலி செலுத்தினர்.