DRDO உற்பத்தி செய்த தயாரிப்புகளை ராணுவத்திற்கு வழங்கிய பாதுகாப்பு அமைச்சர்

0
739

 

  சுதந்திரத்தின் 75 ஆண்டு கொண்டாட்டங்கள் நடை பெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக டிசம்பர் 14 அன்று DRDO பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கு பெற்ற பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு துறையினால்(DRDO) உற்பத்தி செய்யப்பட தயாரிப்புகளை ஆயுதப்படைகளுக்கு வழங்கினார்.

     இந்நிகழ்ச்சியில் பேசிய அவர் “ஒருங்கிணைப்பு என்பது அரசாங்கத்தால் எடுக்கப்படும்  முயற்சிகளால் மட்டுமே சாத்தியமாகாது. நமது பாதுகாப்புப் படைகளின் விருப்பங்களை நிறைவேற்றுவதன் மூலமே அது முழுமை அடையும்.நமது எதிரிகளால் ஏற்படும் சவால்களை எதிர்கொள்வதற்காக  நமது திறனை கூட்டாக மேம்படுத்துவதற்கான முயற்சி இது” என்று அவர் கூறினார்.

     இந்நிகழ்ச்சியில் சுய சார்பு இந்தியா இயக்கத்தின் கீழ்  பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு துறையினால்(DRDO) தயாரிக்கப்பட்ட நவீன ஆயதங்களை இந்தியாவின் பாதுகாப்பு படைகளுக்கு அவர் வழங்கினார்.  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here