ராணுவத் தலைமைத் தளபதி (சி.டி.எஸ்) ஜெனரல் பிபின் ராவத்தின் திடீர் மறைவுக்குப் பிறகு காலியாக இருந்த தலைமைப் பணியாளர்கள் குழுவின் (COSC)தலைவராக ராணுவத் தலைமைத் தளபதி ஜெனரல் எம்.எம். நரவனேவை அரசாங்கம் நியமித்துள்ளது. டிசம்பர் 8 அன்று ஒரு ஹெலிகாப்டர் விபத்தில் ஜெனரல் பிபின் ராவத் இறந்ததைத்தொடர்ந்து காலியான அந்த பதவிக்கு ஜெனரல் நரவனே நியமிக்கப்பட்டுள்ளார். இதில் அவர் ஏற்கனவே பதவி வகித்த ராணுவ தலைமை பொறுப்போடு சேர்த்து கப்பல் படை மற்றும் விமான படையின் பொறுப்புகளையும் அவர் வகிப்பார். டிசம்பர் 15ம் தேதி அன்று வெளியான அரசின் செய்திக்குறிப்பில் மேற்கண்ட தகவல் கூறப்பட்டுள்ளது.