டாக்டர் அலினா சான், இவர் கனடா நாட்டு மூலக்கூறு உயிரியலாளர், இங்கிலாந்து நாட்டு பாராளுமன்ற அறிவியல் மற்றும் தொழில்நுட்ப குழு ஏற்பாடு செய்திருந்த கூட்டு கூட்டத்தில் உரை நிகழ்த்தும் போது சீனாவின் வூஹானின் ஆய்வகத்தில் இருந்து ஏற்பட்டே கசிவே உலகளாவிய கொரோனா தொற்றுக்கு காரணம் என்று அவர் கூறினார்.
தொற்றுநோயின் தோற்றமாக ஆய்வக கசிவு ஏற்படுவதற்கான நிகழ்தகவு பற்றி கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த அவர், இயற்கையாக வைரஸ் தோன்றுவதைகாட்டிலும் ஆய்வகத்தில் வைரஸ் உருவாவதற்கே வாய்ப்பு அதிகம் என்று தெரிவித்தார்.