கேப்டன் வருண் சிங் உடல் முழு ராணுவ மரியாதையுடன் தகனம்

0
669

கடந்த வாரம் தமிழகத்தில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிர் பிழைத்த குரூப் கேப்டன் வருண் சிங் நேற்று உயிரிழந்தார். அவரின்  உடல், போபாலில் முழு ராணுவ மற்றும் அரசு மரியாதையுடன் வெள்ளிக்கிழமை தகனம் செய்யப்பட்டது.

    பூதவுடல் தகன மைதானத்தை அடைந்ததும், பாதுகாப்புப் படை வீரர்களால் சம்பிரதாய மரியாதை அளிக்கப்பட்டது, அதன்பின் மூத்த அதிகாரிகள் குரூப் கேப்டனின் சவப்பெட்டியில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

    சடங்குகள் முடிந்த  பிறகு, மக்கள் எழுப்பிய ‘குரூப் கேப்டன் வருண் சிங் அமர் ரஹே’ என்ற கோஷங்களுக்கு மத்தியில் இந்திய கடற்படை லெப்டினன்ட் கமாண்டராக உள்ள  அவரது இளைய சகோதரர்,  மற்றும் அவரது மகன் ஆகியோர் வருண் சிங்கின் உடல் ஏற்றப்பட்ட சிதைக்கு தீ வைத்தனர்.

   மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் மற்றும் மருத்துவக் கல்வி அமைச்சர் விஸ்வாஸ் சாரங் ஆகியோர்  வீரருக்கு அஞ்சலி செலுத்தினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here